|
![]() |
சிறுபான்மை தேசிய இனங்களின் வசந்த விழா வழக்கம்
வசந்த விழா, சீனாவின் 56 தேசிய இனங்களின் பொது விழா ஆகும். ஹன் இனத்தை தவிர, பல்வேறு சிறுபாண்மை தேசிய இனங்கள் தத்தமது தனிச்சிறப்பு மிக்க வழிமுறையில் இந்த பாரம்பரிய விழாவைக் கொண்டாடுகின்றன.
லீ இனம் (சீனாவின் ஹைனான் மாநிலத்தில்):வசந்த விழாவுக்கு முந்திய நாளிரவில், குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து சாப்பிடுவதோடு, புத்தாண்டு வாழ்த்து பாடலை பாடுகின்றனர். வசந்த விழாவின் முதலாவது அல்லது இரண்டாவது நாளில் மக்கள் கூட்டாக வேட்டையாடச் செல்கின்றனர்.
யீ இனம் (சீனாவின் சுவ்ச்சுவான் மாநிலத்தில்):வசந்த விழா காலத்தில், யீ இன மக்கள் நிலா நடனம் ஆட வேண்டும். சில கிராமங்களில், பெண்கள், ஓய்வு எடுப்பதற்காக, வசந்த விழாவின் முதலாவது நாளில், ஆண்களும் குடும்ப வேலையைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
மியாவ் இனம் (சீனாவின் ஹுனான், குவ் செள மாநிலங்களில்):வசந்த விழா குவொ சியா ஆண்டாக கூறப்படுகிறது. புத்தாண்டில் நல்ல வானிலையையும் அமோகவிளைச்சலையும் பெறும் வகையில், இவ்வின மக்கள் பன்றியையும் ஆட்டையும் பலியிடுகின்றனர். தவிர, அவர்கள் வசந்த துவக்க பாடலையும் பாடுகின்றனர்.
மென் இனம் (சீனாவின் வடகிழக்கு மூன்று மாநிலங்களிலும் பெய்ஜிங்கிலும் ஹொபெய் மாநிலத்திலும்):அவர்கள் வசந்த விழாவுக்கு முந்திய நாளிரவிலும், வசந்த விழாவிலும் தனியாகக் கொண்டாட வேண்டும். விழாவுக்கு முன்பு, குதிரை, ஒட்டகப் பந்தயங்களும் நடத்தப்படுகின்றன.
துன் இனம் (சீனாவின் குய் செள மாநிலத்தில்):புத்தாண்டின் முதலாவது நாள் காலையில், கெண்டை மீனை மேசையில் வைக்க வேண்டும்.
சுவான் இனம் (சீனாவின் குவாங் சி சுவாங் இன தன்னாட்சி பிரதேசத்தில்):புத்தாண்டுக்கு முந்திய நாளிலேயே புத்தாண்டின் உணவு வகைகளைதயாரித்து முடித்துக்கொள்கின்றனர்.
சியாங் இனம் (சீனாவின் சுவ் ச்சுவான் மாநிலத்தில்):வசந்த விழா காலத்தில், அனைத்து வீடுகளிலும் மாடு, ஆடு முதலிய வழிபாட்டு பொருட்களை வைக்க வேண்டும். தவிர, புத்தாண்டுக்கு முந்திய நாளில், அனைத்து குடும்பத்தினர்களும் மது ஜாடியைச் சுற்றி அமர்ந்து, முதியோரின் தலைமையில், ஒரு மீட்டர் நீளமான குழாய் மூலம், இடது பக்கத்திலிருந்து மது குடிக்கின்றனர்.
சுய் இனம் (சீனாவின் குய் செள மாநிலத்தில்): குழந்தைகள் இனிப்பை கேட்டுப் பெறுகின்றன. அதிகமான இனிப்பைப் பெறும் குழந்தை, எதிர்காலத்தில் திறமையுள்ளதாக வளரும்.
பெய் இனம் (சீனாவின் யுவன் நான் மாநிலத்தில்):புத்தாண்டின் காலை உணவில் அனைவரும் இனிப்பு நீரைக் குடிக்க வேண்டும்.
கொரிய இனம் (சீனாவின் ஜீ லின் மாநிலத்தில்):அனைத்து குடும்பங்களும் அதிகமான வறுவல்களைத் தயாரிக்க வேண்டும். குறிப்பாக, எட்டு வகை தின்பண்டங்களுடன் சோறு சாப்பிடுகின்றனர். புத்தாண்டில், விழாச் சட்டை அணிந்து முதியோருக்கு வணக்கம் தெரிவிக்கின்றனர்.
மங்கோலிய இனம் (சீனாவின் உள் மங்கோலிய இன தன்னாட்சி பிரதேசத்தில்):புத்தாண்டின் காலையில், இளைஞர்கள் குதிரை ஓட்டி, முதியோருக்கு வணக்கம் தெரிவிக்கின்றனர். தவிர, கடவுள் ஆடல் விழா நடத்துகின்றனர்.
ஹனி இனம் (சீனாவின் யுவன் நான் மாநிலத்தில்):இளைஞர்கள் ஒன்றுகூடி, மது குடித்து, பாட்டுப்பாடி, நடனமாடி, காதலனைத் தெரிவு செய்கின்றனர்.
நாசி இனம் (சீனாவின் யுவன் நான் மாநிலத்தில்):வசந்த விழாவில், 13 வயது குழந்தைகளுக்காக ஒரு சிறப்பு சடங்கு நடத்தப்படுகிறது. இதன் மூலம், அவர்கள் பெரியவராக மாறுகின்றனர்.
புமி இனம் (சீனாவின் யுவன் நான், சு ச்சுவான் மாநிலங்களில்):புத்தாண்டைக் கொண்டாடும் பொருட்டு, அவர்கள் சங்கு ஊதுகின்றனர்.
புயி இனம் (சீனாவின் குய் செள மாநிலத்தில்):வசந்த விழாவில், இளைஞர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, கூட்டாக விளையாடுகின்றனர்.
ஒலுன்சுன் இனம் (சீனாவின் ஹெலுங்சியாங் மாநிலத்தில்):புத்தாண்டின் முதல் நாள் காலையில், இளைஞர்கள் முதியோர்களுக்கு மது வழிபாடு செய்து, வணக்கம் தெரிவிக்கின்றனர். பிறகு, இளைஞர்கள் குதிரைப் பந்தயம், வில் போட்டி முதலியவை நடத்த வேண்டும்.
தாவொல் இனம் (சீனாவின் ஹெலுங்சியாங் மாநிலத்தில்):இளைஞர்கள் சாம்பலை மற்றவர்களின் முகத்தில் பூசுகின்றனர். இதுவே, செழிப்பு மற்றும் அன்பை எதிர்பார்க்கும் பொருளாகும்.
|