• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[விழாவும் பழக்கமும்]

யுவான் சியெள விழா

சீன சந்திர நாள் காட்டியின் படி, ஜனவரி 15ம் நாள், வசந்த விழாவின் கடைசி நாளாகவும், யுவான் சியெள விழாவாகவும் இருக்கிறது. இந்த நாளிரவு, புத்தாண்டின் முதலாவது பெளர்ணமி நில இரவாகும். இந்த இரவில் சீன நாட்டுப்புறத்தில் பல்வேறு நிறமான விளக்கைத் தொங்க விடும் வழக்கம் உள்ளது. இதனால், யுவான் சியெள விழா சீனாவின் தீபாவளி நாள் எனப்படுகிறது.

விளக்கு கண்காட்சியும், யுவான் சியெள இனிப்பும், இவ்விழாவின் முக்கிய சும்சமாகும். விளக்கைத் தொங்க விடுவதற்கு காரணம் எனன?கி.மு. 180ம் ஆண்டின் ஜனவரி 15ம் நாள், சீனாவின் சி ஹன் வமிசத்தின் அரசன் ஆட்சி பீடத்தில் ஏறினார். இதைக் கொண்டாடும் பொருட்டு, இந்த நாளை, தீபாவளி நாளாக முடிவுகொண்டுள்ளார். இந்த நாளில், மக்களின் வீட்டிலும், பாதைகளிலும் பல்வேறு வடிவமான நிறமான விளக்குகள் தொங்க விடப்படுகின்றன. கி.மு.104ம் ஆண்டில், யுவான் சியெள விழா, நாட்டின் முக்கிய விழாவாக அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின், யுவான் சியெள விழாவின் கொண்டாட்டம் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது. வெளி இடங்களிலும், பல்வேறு வீடுகளிலும், குறிப்பாக பண்பாட்டு மையத்திலும், பெரும் விளக்குக் காட்சி நடைபெறுகிறது. இரவு முழுவதும், மக்கள், விளக்குகளைப் பார்த்து, விளக்கின் மீது எழுதப்பட்டுள்ள புதிர்களை யூகித்து, dragon விள்ககு நடனத்தை நடத்துகின்றனர். வரலாற்றுப் பதிவின் படி, கி.பி.713ம் ஆண்டில், TANG வமிசத்தின் தலைநகரான சி ஆனில், சுமார் 50 ஆயிரம் நிற விளக்குகளால் உருவாக்கப்பட்ட பெரிய விளக்கு மலை, காட்சிக்கு வைக்கப்பட்டது.

யுவான் சியெள விழாவின் வர்ண விளக்கு, பல்வர்ண தாள்களைப் பயன்படுத்தி, இயற்கை காட்சி, கட்டிடம், மலர், பறவை விலங்கு உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. இதில், பறக்கும் குதிரை விளக்கு, சீனாவின் தனிச்சிறப்பியல்பு வாய்ந்தது. இதுவே, ஒரு வகை பொம்மை விளக்கு ஆகும். ஆயிரத்துக்கு அதிகமான ஆண்டுகள் வரலாறுடையது. இந்த விளக்கின் உள்ளே சக்கரம் பொருத்தப்படுகிறது. சக்கரத்திலுள்ள தாள் குதிரை விரைவாக ஓடுகிறது. அதன் நிழலுருவம், விளக்கில் காணப்பட்டு, வெளியே பார்க்கும் போது, குதிரைகள் ஓடுவதை போன்று தெரிகிறது.

யுவான் சியெள விழாவில் யுவான் சியெள எனும் இனிப்பைத் தின்பது ஒரு வழக்கமாகும். சுங் வமிச காலம் முதல், இந்த இனிப்பு பிரபலமாகியுள்ளது. பசை அரிசி மாவு கொண்டு செய்யப்பட்ட வெள்ளை உருண்டைக்குள், பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் வடப்பகுதியில், யுவான் சியெள என்ற பெயர் இதற்கு தரப்பட்டுள்ளது. சீனாவின் தென்பகுதியில், தான் யுவான் என்ற பெயர் இதற்கு தரப்பட்டுள்ளது.

பேரீச்சம் பழம், பருப்புகள், எள்ளு, கோகொ, சாக்லெட் முதலிய 30 வகை யுவான் சியெளகள் உள்ளன. பல்வேறு இடங்களின் யுவான் சியெள வேறு தனிச்சிறப்பியல்பு கொண்டுள்ளன.

தவிர, யுவான் சியெள திருவிழாவின் போது, பல வகை கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். கோலூன்றி நடப்பது, யாங்கோ ஆடல், சிங்க நடனம் முதலியவை இவற்றில் முக்கியமானவை. சிங்க நடனம் குறிப்பிடத்தக்கத்து. சீனாவைத் தவிர, சீனர் குழுமி வாழும் அனைத்து இடங்களிலும் புத்தாண்டிலும் விழாகளிலும் சிங்க நடனம் நடத்தப்படுகின்றது. தென்பகுதியின் சிங்க நடனம், மாறுபட்ட வடிவம் கொண்டது. பொதுவாக இருவர் ஆடும் ஆடல் இதில் இடம்பெறும். பலர் சேர்ந்து ஆடுவது , சிங்க நடனத்தின் சிறப்பியல்பாகும். சீன நாட்டுப்புற இசையுடன், சிங்க நடனத்தில், பாடகர்களும் பார்வையாளர்களும் ஆக்கப்பூர்வமாக கலந்துகொண்டு, உற்சாகத்தை வெளிப்படுத்துகின்றனர்.

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040