• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[விழாவும் பழக்கமும்]

லாப்பா விழா

சீனாவில், சந்திர நாள் காட்டியின் படி, டிசம்பர் திங்கள் லா திங்கள் என்று கூறப்படுகிறது. டிசம்பர் திங்களின் 8ம் நாள், லப்பா தினமாகும்.

பண்டைக்காலத்தில் சீனா வேளாண் துறையில் மிகவும் கவனம் செலுத்தியது. வேளாண் துறையில், கடவுள் கருணையினால் அமோக விளைச்சல் கிடைப்பதாக கருதப்பட்டது. கடவுளுக்கு நன்றி தெரிவிக்க, மக்கள் வழிபாட்டு நடவடிக்கை நடத்துகின்றனர். வழிபாட்டு விழாவுக்கு பிறகு, மக்கள் இணைந்து, கஞ்சி குடிக்கின்றனர். 5ம் நூற்றாண்டில் இந்த நாள் லாப்பா விழாவாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பெளத்த மதம், சீனாவில் நுழைந்த பின்பு, ஒரு கதை தோன்றியது. டிசம்பர் திங்கள் 8ம் நாளன்று, சாக்கியமுனி புத்தராக மாறும் நாளாகும். இதன் நினைவாக, புத்தமத நம்பிகையாளர்கள் இந்த நாளில் கஞ்சி தயாரித்து, புத்தருக்கு படைத்து வழிபடுகின்றனர்.

சீனர் லாப்பா கஞ்சி உணவு வழக்கம், சுன் வம்ச காலத்திலிருந்து துவங்கியது. அப்போது, ஒவ்வொரு குடும்பமும் இந்த நாளில் லாப்பா கஞ்சி தயாரித்து, முன்னோருக்கு படைந்து வழிபட்டனர்.

லாப்பா கஞ்சியில் மிகவும் அதிகமான பொருட்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, அவரையும் அரிசியும் முக்கியமாக இருக்கின்றன. இதில், சிவப்பு அவரை, பச்சை அவரை, பட்டாணி உள்ளிட்ட எட்டு வகை அவரைகளும், அரிசி, ரப்பர் அரிசி, கோதுமை, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட எட்டு வகை தானியங்களும் உள்ளன.

தவிர, அதற்கு துணைப் பொருட்களாக, வாதுமை, திராட்சை, வேர்கடலை, எப்ரி கோட் உள்ளிட்ட பழங்கள் சேர்க்கப்படுகின்றன.

வாணலியில் நீரை சேர்த்து, மெதுவாக கொதிக்கவிடம்படுகிறது. கொதிக்க பிறகு, சிறிது சக்கரை சேர்க்கலாம். குளிரான டிசம்பர் திங்களில், குடும்பத்தினர்கள் ஒன்றாக அமர்ந்து இனிப்பான சுவையான லாப்பா கஞ்சிக் குடிப்பது, இன்பமான நிகழ்ச்சியாக இருக்கிறது.

பெய்ஜிங் மாநகரவாசிகள், இந்த விழா, வசந்த விழாவுக்கு கட்டியம் கூறும் ஒரு தகவலாக கருதினர்.

கஞ்சிக் குடிப்பதைத் தவிர, சீனாவின் வடபகுதியில் லாப்பா வெள்ளைப்பூண்டு தயாரிக்கும் வழக்கம் இருக்கிறது. வெள்ளைப்பூண்டு தோலை உரித்து, ஜாடியில் வைத்து, காடியைச் சேர்கின்றனர். லாப்பா தின நாளன்று, ஜாடியை மூடி, வெப்பமான அறையில் வைக்கின்றனர். புத்தாண்டுக்கு முந்திய நாளிரவில் தாம்புரினை உண்ணும் போது திறந்து சுவைக்கின்றனர்.

1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040