• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[விழாவும் பழக்கமும்]

ச்சூ சி பற்றிய கதை

சீன சந்திர நாள் காட்டியின் படி, டிசம்பர் திங்களின் கடைசி நாள், CHU XI என்று கூறப்பட்டது. CHU என்பது, சீன மொழியில் நீக்குவது என்ற பொருளாகும். XI என்பது, சீன மொழியில் இரவு என்ற பொருளாகும். சீன மொழியில், CHU XI என்பது, இவ்வாண்டின் கடைசி நாளை விட்டு, புத்தாண்டை வரவேற்பது என்று பொருள் ஆகும்.

சீனாவின் நாட்டுப்புறத்தில் CHU XI வழக்கம் அதிகமாக நிலவுகிறது. இதற்கு முன்பு சில நாட்களில், மக்கள் வீட்டை தூய்மை செய்கின்றனர். புத்தாண்டு வரும் முன்பு, வீட்டின் பழைய சட்டைகளும் எஞ்சிய உணவுகளும் எறியப்பட வேண்டும். இதனால், வறுமை வீட்டுக்குள் வர முடியாது.

சுத்தம் செய்தி பின்பு, மக்கள், வீட்டில் விழா சூழ்நிலையை உருவாக்கினர். CHU XI அன்று, மது அல்லது நீரால் தயாரிக்கும் தூசு எனும் பானத்தைக் குடிக்க வேண்டும். ஒரு பழைய மரபுகதையில், தூசு என்ற குடிசையில், அசாதாரணவர் ஒருவர் வாழ்ந்தார். அவர் காட்டில் மூலிகையை திரட்டினார். CHU XI இரவில், அவர் மூலிகையைப் பயன்படுத்தித் தயாரித்த மருந்துகளை அருகே வசிப்பவர்களுக்கு வழங்கினார். அவர் சொன்னார், புத்தாண்டின் துவக்க நாளில் இதைக் குடித்தால், நோயும் விபத்தும் நீங்கும். இதனால், கிராமவாசிகள், இந்த நீரை தூசு என்று கூறினர். பழைய மருத்துவ புத்தகத்தின் பதிவின் படி, தூசுவில், DA HUANG JU GENG உள்ளிட்ட 7 வகை மூலிகைகள் இடம்பெற்றன.

CHU XI இரவில், ஒவ்வொரு குடும்பத்திலும் அனைவரும் ஒன்று சேர்ந்து விருந்து உண்கின்றனர். சீனாவின் பல்வேறு இடங்களில், ஒன்று சேர்தல் மற்றும் உணவில், வேறுபாடுகள் இருக்கின்றன. தென்பகுதியில், பொதுவாக பத்துக்கு கூடுதலான வகை வறுவல்கள் இடம்பெறுகின்றன. இதில் தூப் மற்றும் மீன் கண்டிப்பாக உள்ளன. இதுவே, சீன மொழியில் செல்வம் என்ற பொருளாகும். வடபகுதியில், தாம்புரின் சாப்பிட வேண்டும். தாம்புரின், சீனாவின் ஒன்று சேர்தல் என்பதைக் காட்டுகிறது.

சு சி இரவில், பெற்றோர் குழந்தைகளுடன் இணைந்து உற்றார் உறவினர் வீட்டுக்கு போய், அன்பளிப்பு வழங்குவது, "குய்சுய்" என கூறப்படும். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து, தமது வீட்டுக்கு திரும்புவது, சான் சுய் என கூறப்படும். வீட்டில், வேலை செய்யாத குழந்தைகளுக்கு பணம் கொடுத்து வாழ்த்து தெரிவிப்பது, CI SUI என கூறப்படும். பிறகு, அனைத்து குடும்பத்தினர்களும் ஒன்று சேர்ந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து, புத்தாண்டு வருவதற்குக் காத்திருக்கின்றனர். இதுவே, சேள சிவை என கூறப்படும்.

சேள சுய் என்பது, மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும். சீனாவின் பழம்பெரும் கவிஞர் லு யியு என்பவர், இதற்கு அழகான கவிதை எழுதியுள்ளார். இப்போது, குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்களுக்கு பெரியவர்களுடன் சேர்ந்து இரவு முழுவதும் விளையாடுகின்றனர்.


1 2 3 4 5 6 7 8
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040