• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கம்பி இசைக்கருவி]

பென்ஹு

 

பென்ஹு எனப்படும் இசைக்கருவி, பாங்ஹு அல்லது சிங்ஹு என்று அழைக்கப்படுகின்றது. அது, உள்ளூர் இசை நாடகத்துடன் தோன்றியது. ஹுசின் எனப்படும் இசைக்கருவியின் அடிப்படையில் அது தயாரிக்கப்பட்டது. ஹுசின் எனப்படும் இசைக்கருவி வகைகளுடன் ஒப்பிடும் போது இவ்விசைக்கருவியின் ஒலி பெரியது என்பது அதன் தனிச்சிறப்பியல்பாகும். குறிப்பாக விறுவிறுப்பான உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் அது திறமையும் நேர்த்தியும் வாய்ந்தது.

சீனாவில் பென்ஹு எனப்படும் இசைக்கருவி சுமார் 300 ஆண்டு வரலாறுடையது. இவ்விசைக்கருவி, மெல்லிய மரத்துண்டால் தயாரிக்கப்பட்டதால் இதற்கு இப்பெயர் சூடப்பட்டது.

துவக்கத்தில், இவ்விசைக்கருவி முக்கியமாக வட சீனாவில் பரவியது. அவ்விடத்திலுள்ள பல உள்ளூர் இசை நாடகங்கள் மற்றும் நகைச்சுவை உரையாடலுக்கு இவ்விசைக்கருவி முக்கிய இணை இசையாகப் பயன்படுத்துப்படுவதுண்டு. அவற்றுக்கிடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதன் காரணமாக, இவ்விசைக்கருவி தன் திறமையை நன்கு வெளிப்படுத்த முடியும். சீனாவின் பல்வேறு இடங்களில் இவ்விசைக்கருவி உள்ளூர் தனிச்சிறப்பியல்பை வெளிப்படுத்தலாம்.

பென்ஹுவின் அமைவு, அடிப்படையில் ஆஹு போல உள்ளது. இருப்பினும் சற்று வித்தியாசம் தெரிகிறது. அதன் வேறுபாடு முக்கியமாக இவ்விசைக்கருவியின் முன் பகுதி தோலால் மூடப்படவில்லை. அதன் ஒலி மிகவும் பெரிது. கிராம மணம் கமழுகின்றது. இசைக்குழுவில் அது இதர இணை இசைக்கருவிகளில் தலைமை பங்கு ஆற்றுவது வழக்கம். இயக்கும் இசையில் இது உச்சத்தில் ஒலிக்கிறது.

புதிய சீனா நிறுவப்பட்ட பின், இசையமைப்பாளர் மற்றும் இசை தயாரிப்பாளரின் முயற்சி மூலம், இவ்விசைக்கருவியைத் தயாரிக்கும் நுட்பமும் பெரிதும் மேம்பட்டுள்ளது. இதன் விளைவாக, பல புதிய வகைகள், பென்ஹு இசைக்கருவிக் குடும்பத்தில் சேர்ந்துள்ளன. இவ்வற்றில் மத்திம ஒலி பென்ஹு, உச்ச ஒலி பென்ஹு, 3 தந்திகளைக் கொண்ட பென்ஹு, மூங்கிலால் தயாரிக்கப்பட்ட பென்ஹு முதலியவை புதிய வகை பென்ஹு ஆகும்.

பென்ஹு வகைகள் அதிகரித்துடன், இதை இசைக்கும் நுட்பமும் மேம்பட்டுவருகின்றது. சீனத் தேசிய இசைக் குழுவில் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த இன்றியமையாத இசைக்கருவியாகவும் உள்ளூர் தனிச்சிறப்பு மிகுந்த தனிக்குரலிசைக்கருவியாகவும் இது மாறியுள்ளது. அதே வேளையில், தேசிய இன இசை நாடகம், தேசிய இன ஆடல் பாடல் ஆகியவற்றுக்கு இணை இசையாகப் பயன்படுத்தப்படுவது வழக்கம்.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040