• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கம்பி இசைக்கருவி]

லெசின்

லெசின் என்பது ஒரு வகை கம்பி இசைக்கருவியின் பெயர். லெஹு என்றும் அது அழைக்கப்படுகின்றது. 20ஆம் நூற்றாண்டின் 20வது ஆண்டுகளில் இவ்விசைக்கருவி தயாரிக்கப்பட்டது. இவ்விசைக்கருவி, சீனாவின் நாட்டுப்புற கலைஞர் வான் தியெயுனால், ச்செஹு எனப்படும் ஒரு வகை இசைக்கருவியின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டது. இவர் சான்துங் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டு, கண்பார்வை இழந்தார். ச்செஹு உள்ளிட்ட நாட்டுப்புற இசைக்கருவிகளை ஆசிரியரிடமிருந்து அவர் கற்றுக்கொண்டார். விவேகம், அயரா படிப்பு ஆகியவற்றின் காரணமாக, ச்செஹு எனப்படும் இசைக்கருவியைக் கொண்டு, சில நாட்டுப்புறப் பாடல்களையும் உள்ளூர் இசை நாடகங்களையும் இசைக்க அவரால் முடிந்தது. 20ஆம் நூற்றாண்டின் 20வது ஆண்டுகளின் முடிவில், ச்செஹு எனப்படும் இசைக்கருவியை வான்தியெயுன் துணிவுடன் மாற்றியமைத்தார். இவ்விசைக்கருவியின் தண்டை நீட்டி, குழலைப் பெருக்கி, அதன் மேல் பாம்புத் தோலால் மூடிவிட்டார். இதனால், ச்செஹு எனப்படும் இசைக்கருவியை விட அதன் ஒலி மேலும் பெரிய, அகலமான புதிய இசைக்கருவியான லெசின் என்னும் இசைக்கருவி தயாரிக்கப்பட்டது. 1953ல் லெசின் என இவ்விசைக்கருவிக்குப் பெயர் சூட்டப்பட்டது.

இவ்விசைக்கருவி, தண்டு, குழல், மேற்பகுதி,(நுனிப் பகுதி),வில் ஆகிய பகுதிகளைக் கொண்டது. அதன் தந்தி, மேற்பகுதி, தந்தி அச்சு(தந்தியின் நடுப்பகுதி) ஆகியவை வெட்டு மரத்தால் தயாரிக்கப்பட்டவை. அதன் நுனிப் பகுதி மண் வெட்டி வடிவமானது. அதன் மேல் பூக்கள் செதுக்கப்பட்டன. அச்சின் உச்சியில் எலும்பு செதுக்கப்பட்டது. அதன் குழல் தட்டையானது. மெல்லிய செம்புத் தகட்டால் தயாரிக்கப்பட்டது. அதன் வில், அவ்ஹுவை விட நீளமானது. இவ்விசைக்கருவி 2 வகைகளைக் கொண்டது. பெரிய வகை, 110 செ.மீ. நீளமுடையது. சிறிய வகை, 90 செ. மீ. நீளமுடையது.

இதர கம்பி இசைக்கருவிகளைப் போல, இசை கலைஞர் இதை இசைக்கும் போது, அமர்ந்த வண்ணம் இசைப்பார். இவ்விசைக்கருவியை தன் இடது காலில் வைத்தவாறு, இடது கையால் தந்தியைத் தொட்டு, வலது கையால் வில்லை ஏந்திய வண்ணம் இரண்டு தந்திகளுக்கிடையில் இழுத்து ஒலி ஏற்படுத்துவார். விரலால் மீட்டும் வழி முறையும் இழுக்கும் வழிமுறையும் தனிச்சிறப்பியல்பு மிக்கவை. எடுத்துக்காட்டாக, இவ்விசைக்கருவியின் வில்லைப் பயன்படுத்தும் போது, இசைக்கருவி இசைப்பவர் அதைப் படிப்படியாக கூட்டுவது, படிப்படியாகக் குறைப்பது, மெல்ல மெல்ல குறைத்து திடீரென்று கூட்டுவது, மெதுவாக கூட்டி, திடீரென குறைப்பது ஆகிய வழிமுறைகளைப் பயன்படுத்தலாம். இவ்விசைக்கருவியை இழுக்கும் வழிமுறை, ஆவு எனப்படும் இசைக்கருவியை இழுக்கும் வழிமுறையுடன் நெருங்கியது. இதில் வேறுபாடு என்னவென்றால், அநேகமாக, சுட்டு விரல், மோதிர விரல் ஆகியவற்றால் தந்தியை வருடுவதாகும்.

லெசின் எனப்படும் இசைக்கருவியின் ஒலி நீண்டு ஒலிப்பது, பெரியது, இனிமையானது. இது, தனி இசை அல்லது கூட்டு இசையாகப் பயன்படுத்தப்படுவதுண்டு. மனிதக் குரலொலி, இசை நாடக ராகம் ஆகியவற்றைப் போல, ஒலி ஏற்படலாம். அத்துடன், பல்வகை விலங்குகளின் குரலொலி, குழல், குழாய், ஊது குழல், சேகண்டி, மேளம் உள்ளிட்ட இசைக்கருவிகளின் ஒலியையும் வெளிப்படுத்தலாம்.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040