• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கம்பி இசைக்கருவி]

கொவ்ஹு

உச்ச ஒலி ஆஹு எனப்படும் ஒருவகை இசைக்கருவியின் பெயர் கொவ்ஹு என்பதாகும். ஆஹு எனப்படும் ஒரு வகை இசைக்கருவியின் அடிப்படையில் அது மாற்றியமைக்கப்பட்டது. சீனாவின் நாட்டுப்புற இசை வகையைச் சேர்ந்த குவாங்துங் இசையுடன் இது நெருங்கிய தொடர்புடையது.

குவாங்துங் இசை என்பது, சீனாவின் குவாங்துங் பிரதேசத்தில் உள்ள ஒரு வகை நாட்டுப்புற இசைக்கருவியால் இசைக்கப்படும் இசையாகும். அது, உள்ளூர் இசை நாடகம் மற்றும் நாட்டுப்புற இசையிலிருந்து துவங்கியது. துவக்கத்தில் கொவ்ஹு எனப்படும் இசைக்கருவி குவாங்துங் இசையில் இடம்பெறவில்லை. கடந்த நூற்றாண்டின் 20ஆம் ஆண்டுகளின் முன்னரும் பின்னரும் குவாங்துங் இசையமைப்பாளரும் இசைக்கலைஞருமான lu wen chen இதை மாற்றியமைத்தார். மாற்றியமைக்கப்பட்ட பின், உச்ச ஒலி கொண்ட ஆஹு, கொவ்ஹு என அழைக்கப்படுகின்றது. இது விரைவில் குவாங்துங் இசையில் ஆன்மாவாக மாறிவிட்டது.

கொவ்ஹு என்னும் இசைக்கருவியின் அமைவு, தயாரிப்பு, மூலப்பொருள் ஆகியவை, ஆஹு என்னும் இசைக்கருவி போல உள்ளன. அவற்றுக்குமிடையில் வித்தியாசம், கொவ்ஹு என்னும் இசைக்கருவியின் குழல் மெல்லியது. கொவ்ஹு பின்னதாக உற்பத்தி செய்யப்பட்டதால், இசைக்கருவித் தயாரிப்பாளர் இதை மாற்றியமைப்பதில் கவலையும் கட்டுப்பாடும் குறைவு. அவர்கள் இதை மாற்றியமைத்த பின்னர், அதன் ஒலி பெருகியுள்ளது. சிலர் 2 தந்திகளைக் கொண்ட கொவ்ஹுவை 3 தந்திகளைக் கொண்ட கொவ்ஹுவாகத் திருத்தியமைத்துள்ளனர். இதன் விளைவாக அதன் ஒலி அளவு அதிகரித்துள்ளது.

கொவ்ஹு என்னும் இசைக்கருவியின் ஒலி, தெளிவானது. உயரமானது. soprano போன்றது. இசைக்குழுவில் அது மிகவும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. சீனத் தேசிய இன மூங்கில் குழல் இசை மற்றும் நரம்பிசைக் குழுவில் இது முக்கிய இடம்பெற்றுள்ளது. தவிர, இவ்விசைக்கருவியின் வெளிப்படுத்தல் ஆற்றல் மிக்கது. இது அடிக்கடி இசையின் முக்கிய ராகத்துக்கு இணை இசையாகப் பயன்படுத்தப்படும். அத்துடன், உணர்ச்சியின் தேவைக்கேற்ப, முக்கிய ராகத்தை அதனால் அழகுப்படுத்தலாம்.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040