• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கம்பி இசைக்கருவி]

நியூதெய்சின்

நியூதெய்சின் எனப்படும் இசைக்கருவி, சீனாவின் தொன்மை வாய்ந்த மக்களிடை இழுத்தல் இசைக்கருவியாகும். முக்கியமாக, சீனாவின் குவெய்சோ மாநிலம், ஹுநான் மாநிலம், குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம் ஆகிய பிரதேசங்களில் துங் இன மக்கள் வாழும் இடங்களில் இவ்விசைக்கருவி பரவிவருகின்றது. இவ்விசைக்கருவி மெல்லியது, நீளமானது. அதன் வடிவில் மாட்டுக் கால் போன்றது. ஆகையால் தமிழ் மொழியில் மாட்டுக் கால் இசைக்கருவி என்று பொருட்படுகின்றது. சீன மொழியில் மாடு என்ற சொல்லின் உச்சரிப்பு நியூ என்பதாகும். கால் என்ற சொல்லின் சீன மொழி உச்சரிப்பு தெய் என்பதாகும். சீன மொழியில் சின் என்றால் ஒருவகை இசைக்கருவியின் பொது பெயர். இவ்விசைக்கருவி, முழுமையான வெட்டு மரத்தால் தயாரிக்கப்பட்டது. அதன் பிற்பகுதியின் உட்புறத்தில் காலியாக உள்ளது. அதன் மேல் வெட்டு மரப் பலகையால் மூடப்பட்டுள்ளது. அதன் முற்பகுதியின் நுனி, சதுர வடிவம். அதன் இரு பக்கங்களிலும் மரத்துண்டால் தயாரிக்கப்பட்ட ஒரு தந்தி அச்சு உண்டு. இவ்விசைக்கருவியின் வில், மெல்லிய மூங்கிலால் தயாரிக்கப்பட்டது.

சீனாவின் இதர இழுத்தல் இசைக்கருவிகளுடன் ஒப்பிடும் போது, இவ்விசைக்கருவிக்குத் தனிச்சிறப்பியல்பு உண்டு. அதன் ஒலி மெல்லியது. சற்று கரகரப்பானது. தனிச்சிறப்பு வாய்ந்தது. அது, மனிதக் குரலொலியுடன் நெருக்கமாக இசைந்து ஒலிப்பது, மிகுந்த சிறுபான்மை தேசிய இனத் தனிச்சிறப்பியல்பும் உள்ளூர் பாவனையும் வாய்ந்தவை. இவ்விசைக்கருவியை இழுக்கும் வழிமுறை, அடிப்படையில் மேலை நாடுகளின் வயலின் இசைக்கருவி போல உள்ளது. இசைக்கருவி இசைப்பவர் இசைக்கும் போது, இதன் பிற்பகுதி முனையைத் தன் இடது தோளின் கீழ் பகுதியில் வைத்த வண்ணம், இடது கையால் இதை ஏந்திக்கொண்டு தந்தியை அழுத்துவதோடு, வலது கையால் வில்லை இழுப்பார். அதன் ஒலி வீச்சு அளவு, வயலினை விட குறுகியது.

இவ்விசைக்கருவியைப் பொதுவாக மக்களே சொந்தமாகத் தயாரிக்கின்றனர். இதனால் மூலப்பொருளும் இவ்விசைக்கருவியின் அளவும் வேறுபடுகின்றன. நீண்டகால நடைமுறையில் துங் இன மக்கள் இவ்விசைக்கருவியைத் திருத்தியமைத்துள்ளனர். மாற்றியமைக்கப்பட்ட பின் இசையதிர்வு எழுப்பும் குடம் பெரிதாகிவிட்டது. அத்துடன், ஒரு பக்கத்திலுள்ள மரத்துண்டு தகடில் ஒலி துவாரம் உண்டாக்கப்பட்டுள்ளது.

துங் இன மக்களின் பண்பாட்டு வாழ்க்கையில் இவ்விசைக்கருவி முக்கிய இடம் வகிக்கின்றது. அவர்களைப் பொறுத்தவரை, இது இன்றியமையாதது. ஏறக்குறைய அனைத்து துங் இன இளைஞர்களிடமும் தலா ஒன்று உள்ளது. விழா நாட்களிலும் பொழுதுபோக்கு நேரத்திலும் அவர்கள் இவ்விசைக்கருவியை இசைத்த வண்ணம், வழியில் பாடியபடியே தமது உற்றார் உறவினர்களின் வீட்டுக்கு நடந்து செல்வது வழக்கம். துங் இனக் கிராமத்தில் இவ்விசைக்கருவி இசைக்கப்பட்டால் இக்கிராம மக்கள் உடனே இவ்விசைகருவி ஒலித்த திசையை நோக்கி ஒன்று கூடுவர். அவர்கள் இசைக்கருவியை இசைத்த வண்ணம் பாடுவர். மிகவும் விறுவிறுப்பான ஆனந்த சூழ்நிலை ததும்பியிருக்குமாம்.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040