• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கம்பி இசைக்கருவி]

மாதுவ்சின்

மாதுவ்சின் எனப்படும் ஒரு வகை இசைக்கருவி, சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றான மங்கோலிய இனத்தவரின் இழுத்தல் இசைக்கருவியாகும். அதன் மேல் பகுதியின் முனை, குதிரைத் தலை போல இருப்பதால் அது புகழ்பெற்றது. சீன மொழியில் மா என்றால் குதிரை. துவ் என்றால் தலை. சின் என்றால் இசைக்கருவி. மாதுவ்சின் எனப்படும் இசைக்கருவி நீண்ட வரலாறுடையது. 13வது நூற்றாண்டில் இவ்விசைக்கருவி மங்கோலிய இன மக்களிடையில் பரவத் துவங்கியது. உள் மங்கோலியாவின் பல வட்டங்களில் பரவியிருப்பதால், அதன் பெயர், வடிவம், ஒலி, இயக்கும் வழிமுறை ஆகியவை வேறுபடுகின்றன. உள் மங்கோலியாவின் மேற்கு பகுதியில் அது, முலின்ஹுஉர் என்று அழைக்கப்படுகின்றது. கிழக்கு பகுதியில் சார் என அழைக்கப்படுகின்றது.

இவ்விசைக்கருவியின் இசையதிர்வு எழுப்பும் குடம், சதுர ஏணி வடிவமானது. தந்தின் மேல் பகுதி முனையில் குதிரைத் தலைச் சிற்பம் செதுக்கப்பட்டது. இது தான் இவ்விசைக்கருவியின் அடிப்படை அமைவு. மாதுவ்சின் என்று அது அழைக்கப்படுவதற்கும் காரணமாகும். இவ்விசைக்கருவியின் தந்தி தனிச்சிறப்பு வாய்ந்தது. அது பல குதிரை வால் மயிர்களால் தயாரிக்கப்பட்டது. அதன் 2 நுனிகளிலும் பட்டு நூலால் கட்டப்பட்டு, அதன் இசைக்கருவியில் கட்டப்பட்டுள்ளது.

இவ்விசைக்கருவியின் ஒலி இனிமையானது. சீனா மற்றும் வெளிநாடுகளின் கம்பி இசைக்கருவிகளில் இது தனிச்சிறப்புடையது.

துவக்கக் காலத்தில் இவ்விசைக்கருவி, இசையமைப்பாளரால் தயாரிக்கப்பட்டது. அதன் ஒலி சிறியது. இதனால், மங்கோலிய கூடாரத்திலோ அறையிலோ இசைக்கப்படுவதற்கு மட்டுமே ஏற்றதாக இருந்தது. காலப்போக்கில், சீனாவின் இசைக்கருவித் தயாரிப்பாளர் இந்தப் பாரம்பரிய இசைக்கருவியை மாற்றியமைத்தனர். புதிய மாதுவ்சினின் ஒலி ஓங்கி ஒலிக்கிறது. குதிரை வால் மயிர் தந்திக்குப் பதிலாக, நைலான் நூலிழை தந்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அதன் ஒலி மேலும் பெருகியுள்ளது. இத்தகைய இசைக்கருவி அரங்கிலோ வெளிப்புறத்திலோ இசைக்கப்படுவதற்கு ஏற்றது. இவ்விசைக்கருவியை இழுத்து இசைக்கலாம். இது மட்டுமல்ல, அதன் தந்தியை மீட்டும் இசைக்கலாம். மங்கோலிய இனத்தின் மிக முக்கியமான தனி இசைக் கருவிகளில் ஒன்றாக இது திகழ்கின்றது.

இசைக்கருவித் தயாரிப்பாளர் பெரிய மற்றும் நடுத்தர மாதுவ்சின்களையும் தயாரித்துள்ளனர். இவ்விசைக்கருவியை இழுக்கும் வழிமுறை, மேலை நாடுகளின் இழுத்தல் இசைக்கருவிகளில் இடம்பெறும் violoncello மற்றும் contrabass போல உள்ளது. இதனால், மாதுவ்சின் எனப்படும் இசைக்கருவி, உச்ச ஒலி, மத்திம ஒலி, கீழ் ஒலி ஆகிய மூன்று வகைகளைக் கொண்ட இசைக்கருவியாக மாறியுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இப்புதிய வகை மாதுவ்சின் என்னும் இசைக்கருவியின் வடிவில், மங்கோலிய இனத்தின் தனிச்சிறப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சிறுபான்மை தேசிய இனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த படமும் அதில் தீட்டப்பட்டுள்ளது. அதைப் பார்க்கும் போது, ஒரு சிறந்த கலைப் பொருள் என்று கூறுவதற்கு மிகையாகாது.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040