• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கோளிக்கை]

நிழல் கூத்து 1

நிழல் கூத்து வடமேற்கு சீனாவின் ஷான்சி, கான்சு மற்றும் நிங்சியா மாநிலங்களின் கிராமப்ப பிரதேசங்களில் தோன்றிய நாட்டுப்புறக் கலையாகும். இது 14ஆம் நூற்றாண்டுக்கும் 19ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் சீனாவை ஆண்ட மிங் மற்றும் ச்சிங் வம்ச காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. இதில் பயன்படுத்தப்பட்ட உருவங்கள் பார்ப்பதோடு அழகாகவும் கவர்ச்சிகரமானதைகவும் இருக்கின்றன. இவற்றை செதுக்குவதற்கு நுட்பம் மிகுந்த திறன் தேவை.

எருதின் தோல், இந்த பாலை உருவங்கள் செய்ய பயன்படுத்தப்பட்டன. இவை சரியான கனத்துடனும், மிருதுவானதாகவும் இருந்தது. நீடித்துழைப்பதால் மக்கள் எருதுத் தோல்களை தெரிந்தெடுத்தனர். மக்கள் முதலில் எருதுத் தோலைத் துப்பரவு செய்து உலர்த்துவார்கள். பின்னர், அவர்கள் தோலின் மீது பாவைகளின் வடிவத்தை வரைந்து அதை வெட்டுவார்கள், பின்னர் அவர்கள் அவற்றை தண்ணீரில் முக்கி வைத்து நிறைம் சேர்த்து, பிறகு வெளியே எடுத்து அழுத்துவார்கள். இது மிகவும் கஷ்டமானது. ஆனாலும் முக்கியமாக ஒரு தயாரிப்பு நிலை. இறுதியாக தோல் உலர்த்தப்பட்டு, கூத்து நிகழ்த்துவதற்காக ஒன்றாகக் கட்டி வைக்கப்படுகின்றது.

படத்தில் உள்ள இரண்டு உருவங்கள் தாவோ மதத்தின் முதன்மை தெய்வமும் மற்றும் தாவோ மதத்தை உருவாக்கிய Lao-tzuஉம் ஆகும். லாவோ ஹுவை செய்வது மிகவும் சிக்கலான வேலை. அந்தப் பாவையை மிகவும் தாராளமாக அசைக்கலாம். சிவப்பு, மஞ்சள், கறுப்பு மற்றும் பச்சை ஆகியை நிறங்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், மிகவும் சிக்கலான வடிவங்களில் நூட்பமான நிறங்களைக் கூட அந்தப் பாவைகள் பரதிபலிக்க முடியும்.

தாவோயிசத்தின் முதன்மைத் தெய்வத்திற்கு நீண்ட மெல்லிய கண்கள், சிறிய வாய் மற்றும் கூரான மூக்கு இருப்பதால் அது கருணை மிகுந்த சாந்தமான தெய்வம் என்ற எண்ணம் மக்களுக்கு உண்டாகிறது. இன்னொரு உருவமான லாவோ ஸு வட்டமான கண்கள், சப்பையான மூக்கு, ஏறு நெற்றியையும் கொண்டதாக பார்ப்பதற்கு சக்தி வாய்ந்ததாகவும் உயிர்த்துடிப்புடன் இருப்பதாகவும் தோன்றுகின்றது.

தோல்பாவைக் கூத்து கலையில் நிகழ்த்துதலுக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றது. இதில் பாடல்களின் உணர்ச்சிக்கு ஏற்ப, உடம்பின் ஒவ்வொரு பகுதியையும் அசைத்து, கூத்து முழுவதும் வெவ்வேறு பண்புகள் காட்டுப்படுகின்றன.

கான்சு மாநிலத்தில் தோல்பாவைக் கூத்தில் பல வடிவங்கள் உள்ளன. இந்த படம் சுய் மற்றும் தாங் வம்சத்தின் ஒரு கதையை சித்திரிக்கின்றன. பிரகாசமான நிறங்கள் அலங்கரிப்புக்காக பயன்படுத்தப்படுகின்றன. திறமையாக நடிப்பதற்காக உடலின் வேறுபட்ட பகுதிகள் சிரியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040