• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[கோளிக்கை]

சிறிய களிமண் சிலை 1

மத்திய சீனாவிலுள்ள ஹெர் நான் மாநிலம் ஊதுகுழல் போன்று ஊதக் கூடிய சிறிய களமண் சிலைகளை செய்கின்றது. அநேகமானவை குரங்குளாக இருக்கின்றன. பலவகையான சிறிய களிமண் சிலைகளில் மனித குகக் குரங்குகள், பீச் பழத்துடன் குரங்குகள் மண்வெட்டியுடன் குரங்குகள் மற்றும் ஏனைய வடிவங்களில் உள்ளன.

உள்ளூர் கலாச்சாரப்படி, இந்த களிமண் சிலை விளையாட்டுப் பொம்மைகளாக மட்டுமின்றி காலாச்சாரப் பின்னணியையும் கொண்டிருக்கின்றன.

படத்தில் குரங்கின் முகம் வார்த்து எடுக்கப்பட்டது. முதுகும் வாலும் கைகளைல் செய்யப்பட்டவை. முகத்திலும் வாலிலும் துனைகள் உள்ளன. இவற்றின் மூலம் ஊதுகுழல் போன்று ஊதலாம். மக்கள் முகத் தோற்றங்களை வரைகின்றனர். இக்களிமண்களில் கூர்மையான வாயும், வட்டகண்களும், சிவப்பு முகமும் மிகைப்படுத்த வரையப்பட்டன. இது புதிராகக் காணப்படுகின்றது.

களிமண் சிலை 2மத்திய சீனாவின் ஹெர் நான் மாநிலத்தில் குவாயா யாங்கில் களிமண் சிலைகள் வடிமையாக இரண்டு தலைகளுடன் செய்யப்படுகின்றன. மக்கள் அவைகளை வடிவமைப்பதற்கு கைகளைப் படன்படுத்துகின்றார்கள். ஒரு களிமண் சிலையை வடிவமைப்பதில் 5 நிலைகள் உள்ளன. களிமண்பிசைதல், வார்ப்பு எடுத்தால், உருவமைத்தல், வர்ணமிடல், அளங்காரப்படுத்தல் என்பன அவையாகும். இந்த களிமண் சிலைகள் ஒவ்வொன்றாக வர்ணமிடுவதற்குப் பதிலாக மொத்தமாக வர்ணமிடப்படுகின்றன. மக்கள் அலங்கரிப்பதற்காக நிறங்களைச் சேர்ப்பதற்கு தூரிகைக்குப் பதிலாக, சோளத்தட்டையைப் பயன்படுத்துகின்றார்கள். இவை சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை போன்ற வழமையான நிறங்களாக உள்ளன.

ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட 2 பன்றிகளின் உருவங்களை இந்தப்படம் காட்டுகின்றது. மக்களஅ சிறிய பன்றிகளையும், கோடுகளையும் வரைவதற்கு வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துகின்றார்கள். பன்றிகளின் மூக்கின் நீளம் வேறுபட்டு இறுக்கின்றன. அவைகளின் காதுகளும் அவ்வாறே இருக்கின்றன. அவை சுவாரசியமாகவும், சிரிப்பூட்டுவதாகவும் காணப்படுகின்றன. அந்தப்படம் தெளிவாக எல்லா அம்சங்களுக்குடனும் வரையப்பட்டுள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040