• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனப் பண்டைகால கவிதைகள்]
புத்திசாரி எழுத்தாளர் சூ ஷு

சீனாவின் பண்பாட்டு துறையில் சூ ஷு என்பவர் 1037ம் ஆண்டில் பிறந்தார். 1101ம் ஆண்டில் மரணமடைந்தார். அந்த எழுத்தாளரின் புனை பெயர் தூங் போ சூ ஷு. சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் மெய் சான் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை சீனாவில் புகழ்பெற்ற பழம் பெரும் இலக்கிய அறிஞர் பாராட்டப்பட்டவர். குடும்பத்தின் பண்பாட்டு சூழல் காரணமாக சூ ஷு குழந்தைப் பருவத்திலேயே இலக்கியத்தில் மாபெரும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். எழுத்தாளரான பின் சீர்திருத்தத்தில் அவர் உற்சாகத்துடன் ஈடுபட்டு தேசத்தின் அமைதிக்காக போராடினார். வட்டார அதிகாரியாகவும் மன்னராட்சியில் அதிகாரியாகவவும் பணிபுரிந்த போது அவர் சீர்கேட்டை எதிர்த்து சீர்திருத்தத்தை பிரச்சாரத்தில் பாடுபட்டார்.

தமது வெளிப்படையான குணத்தினால் மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தில் அவரைத் தியாகம் செய்யத் தூண்டின. அவருடைய பிற்பாதி வாழ்க்கை பல பல அரசியல் இன்னல்களுக்குள்ளாக்கப்பட்டது. 43 வயது முதல் சூ ஷு பல முறை மன்னராட்சியால் சிறையில் வைக்கப்பப்ட்டு தொலை தூரத்துக்கு விரட்டியடிக்கப்பட்டார். ஒவ்வொரு முறையும் முந்தியதை விட அதிகத் தொலைவுக்கு கடத்தப்பட்டார். மோசமான சூழலில் வசிக்க வேண்டியிருந்தது. கடுமையான மனித வாழ்க்கை போராட்டத்தில் சூ ஷு சீனாவின் கன்பிஃசிஸ், புத்த மதம், தௌ மதம் ஆகிய தத்துவங்களை ஒன்றிணைத்து இந்த சிந்தனையுடன் அவர் பிரச்சினைகளைக் கையாண்டு அமைதியான மனப்பான்மையுடன் வாழ்க்கையில் துன்பத்தை நீக்கினார். புனித எதிர்காலத்தை எதிர்பார்த்து வாழ்க்கையில் அருமையான பொருட்களை நாட கன்பிஃசிஸ் சிந்தனை அவருக்கு உதவியது. சூ ஷு தமது வாழ்க்கை கௌரவத்தை நிலைநிறுத்தி தீவிர தாக்குதலை எதிர்த்து நின்றார்.

சூ ஷு மனிதர்களை நேர்மையாக நடத்தினார். அவருடைய குணம் விறுவிறுப்பாக இருந்தது. அவருடைய குணம் சீனாவின் நிலபிரப்புத்துவ சமூகத்தின் பிற்காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்களின் பாராட்டை பெற்றது. துங் போ மாதிரி என்பது சீனாவில் 800 ஆண்டுகளாக பரவியது.

சூ ஷு திறமைசாலி. அவருடைய கவிதைகள், தாங் மற்றும் சுங் வம்சகாலங்களில் பரவிய ஒரு சிறப்பு கவிதை, வடிவக்கிலான சிகள் கட்டுரைகள் ஆகியவை மக்களால் பாராட்டப்பட்டவை. அவருடைய கவிதைகள் பலவகை பாணிகளில் அமைந்தவை. கற்பனையும் மொழிச் செழுமையும் கவிதைகளில் நிறைந்து காணப்படுகின்றன. அவருடைய சிகள் தனிச்சிறப்பு மிக்கவை. இவற்றை மேலும் பரந்தளவிலான சமூகத்துடனும் மனித வாழ்க்கையுடனும் இணைக்க அவர் பாடுபட்டார். அவருடைய கட்டுரையின் அடிப்படை ஆற்றல் வலிமையானது. திறமையும் கட்டுரைகளில் தாராளமாக காணப்படுகின்றது. சீனாவின் தாங் சுன் வம்சகாலங்களில் புகழ்பற்ற எட்டு பண்டைய எழுத்தாளர்களில் அவருடைய சாதனை மிக அதிகமாகும். இருந்தாலும் அவருடைய வாழ்க்கை அவ்வளவு செழுமையாக இல்லை. அறிஞர்கள் அவருடைய கட்டுரை மாதிரியாகக் கொண்டு படைப்புகளை படைத்தனர்.

சூ ஷுயின் பயணக் கட்டுரைகள் மிகவும் ருதழ்பற்றவை. எடுத்துக்காட்டாக அவர் எழுதிய "ச்சே பி "தொகுதியில் முதலாவது கட்டுரையில் தெளிவான நிலா இலையுதிர் காலம் ஆகியவை வர்ணிக்கப்படுகின்றது. இரண்டாவது கட்டுரையில் குளிர்காலத்தை வர்ணிக்கும் மலை நிலா, ஏரி, கற்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. கவிதையின் உணர்ச்சியுடன் வாழ்க்கையில் நிலவுகின்ற பொருட்கள் இணைக்கபடுகின்றன. சுன் வம்சகாலத்தின் கட்டுரையின் தலைசிறந்த படைப்புகளாக அவருடைய கட்டுகளைகள் பாராட்டப்பட்டன.

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040