• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனப் பண்டைகால கவிதைகள்]

சியுவானும் அவருடைய கவிதைகளும்

சியுவான் பல ஆயிரம் ஆண்டுகளாக சீன மக்களால் மதிக்கப்பட்டு நேசிக்கப்பட்ட கவிஞராவார். அவர் போர் காலத்தில் அதாவது கி.மு 475ம் ஆண்டு முதல் கி.மு 221ம் ஆண்டு வரையான காலத்தில் வாழ்ந்தார். போர்க்கால நாடு என்றால் பல பல மன்னராட்சிகள் நிலவிய நாடாகும். மன்னர்கள் தமக்கிடையில் போர்புரிந்தனர். அப்போது சின் நாடும் ச்சு நாடும் மிக வலிமையான நாடுகளாகும். மற்ற பத்துக்கும் அதிகமான நாடுகள் அந்த இரண்டு வல்லரசுகளைச் சார்ந்திருந்தன.

சியுவான் ச்சு நாட்டின் மேல் இனத்தை சேர்ந்தவர். அரசாங்கத்தில் உயர் நிலை பதவியில் இருந்தார். அவருக்கு கல்வி கேள்விகளில் வல்லவராக திகழ்ந்தார். தூதாண்மை துறையில் தேர்ச்சி பெற்றவர். ச்சு மன்னர் அவரை மிகவும் நம்பினார். அப்போது பல்வேறு நாட்டு ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தமக்குச் சேவைபுரியுமாறு திறமைசாலிகளை அழைக்கும் பழக்கம் உண்டு. ஆகவே புகழ்பெற்ற அறிஞர்கள் வெவேறு நாடுகளுக்கு சென்று தம் அரசியல் எதிர்காலத்தை வகுத்துக் கொண்டனர். அவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சியுவான் வித்தியாசமானவர். அவர் தாய்நாட்டிலேயே பிடிவாதமாக வசித்தார். அவர் தமது திறமையை ச்சு மன்னருக்காக பயன்படுத்த விரும்பினார். ச்சு நாட்டின் அரசியல் மேலும் வெளிப்படையாகவும், நாட்டின் ஆற்றல் வலிமையாகவும் வளர அவர் ஆட்சியாளருக்கு சேவை புரிந்தார். இந்த கருத்துடன் மரணமடையும் வரை அவர் தாய்நாட்டை விட்டு வெளியே செல்ல விரும்பவில்லை. ஆனால் உள் துறையிலும் தூதாண்மை துறையிலும் அவருக்கும் ஆடம்பரமான மேல் இன குடும்பத்திற்குமிடையில் தீவிர முரண்பாடு ஏற்பட்டது. அதேவேளையில் அவர் மற்றவரால் சிக்கவைக்கப்பட்டார். அவர் ச்சு மன்னரிடமிருந்து பிரிக்கப்பட்டார். பின் ச்சு நாட்டின் வல்லரசு தகுதியும் அரசின் ஆற்றலும் படிப்படியாக பலவீனமாகின. கி.மு.278ம் ஆண்டில் சின் நாட்டு படைகள் ச்சு நாட்டின் தலைநகரை கைப்பற்றின. நாடு அழிக்கப்ப்ட்டது. நிலைமையை பார்த்து ஆத்திரமடைந்த சியுவான் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் பல தலைமுறைகளுக்கு விட்டு சென்ற சொத்து அழியாப் புகழ் ஆகும். சுயேச்சை முறையில் கவிதை உருவாக்கிய முதலாவது கவிதைஞரான அவர் படைத்த் "லீ சோ" என்ற கவிதை சீன பண்டைகால பண்பாட்டு வரலாற்றில் மிக நீளமான கற்பனை வளம் மிக்க அரசியல் கவிதையாகும். இதில் அவர் பல வரலாற்று கதைகளை பயன்படுத்தினார். ச்சு மன்னர் பண்டைகாலத்தின் மன்னர்களான யியௌ, சி, யூ ஆகியோரை போல திறமைசாலிகளை பயன்படுத்தி ஆட்சிபுரிய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.. கவிதை மூலம் கருத்துக்களை தெரிவிப்பதில் அவருடைய இந்த கவிதை சிறந்து விளங்கியது. இளம் தலைமுறையினர் அவரை பின்பற்றி கவிதை படைத்தனர்.

"லீ சோ" தவிர, சியுவானின் "ஆகாயத்துக்கான கேள்வி"எனும் கவிதையும் பண்டைகாலத்திலும் இன்றும் காணா கிடைக்காத சிறப்பான கவிதையாகும். கவிதையில் 172 வினாக்கள் கேட்கப்பட்டன. கால நிலைவி நிலவியல், பண்பாடு, தத்துவம் முதலிய துறைகளுடன் இந்த கவிதை தொடர்புடையது. பாரம்பரிய கருத்துக்களை எதிர்த்து துணிவுடன் வினா கேட்கும் கவிஞரின் எழுச்சியும் உண்மையை கூறும் துணிச்சலும் எழுச்சியும் இந்த கவிதையில் காணப்படுகின்றன. தவிர, அவர் படைத்த "9 பாட்டுக்கள்"மக்களின் வழிபாட்டின் அடிப்படையில் கடவுளை வழிப்படும் பாட்டாகும். கவிதை மூலம் பெரும்பாலான தெய்வங்களின் தோற்றம் வர்ணிக்கப்பட்டது. மனிதரும் தேவனும் காதலிக்கும் கதைகள் கவிதையில் காணப்பட்டன.

சியுவானின் படைப்புகளில் பற்பல கற்பனைகளும் சிந்தனைவளமும் உள்ளன. பூ, புல் மரம் ஆகியவற்றை மனிதராக மாற்றி பல தேவிகளின் தோற்றத்தை உருவாக்குவதன் மூலம் அவரற்றின் பெரிய உணர்ச்சியை அவர் வருணித்தார். ஆகவே சியுவானின் கவிதைகளை படிக்கும் போது மொழியின் அருமையை மட்டுமல்ல் வர்ணனை ஆற்றலையும் மக்கள் உணரலாம். நாட்டுபற்றுடன் தாயகத்தை விரும்பும் சியுவானின் உணர்ச்சியை கவிதைகளை படிக்கும் போது நீங்கள் உணரலாம். இந்த நிலைமையில் பல ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்டுகள் கழிந்த பின் சியுவான் சீன மக்களால் மிகவும் பிடிக்கும் பண்டைகால கவிஞராகியுள்ளார்.

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040