• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனப் பண்டைகால கவிதைகள்]

முதலாவது கவிதை தொகுதி "பாடல் புத்தகம்"

கி.மு 7ம் நூற்றாண்டில் சீனாவில் முதலாவது கவிதை தொகுதி உருவாக்கப்பட்டது. வரலாற்று கவிதைகள், SATIRICAL POEM அங்கத் கவிதைகள், கதை கவிதைகள், காதலைப் போற்றும் பாடல்கள், போரைப் போற்றும் பாடல்கள், பாராட்டும் பாடல்கள், காலகட்ட பாடல்கள், உழைப்பு பாடல்கள் முதலியவை இந்த கவிதைத் தொகுதில் சேர்க்கப்பட்டவை. இந்த கவிதை தொகுதியில் பலரின் விவேகம் குவிந்துள்ளது. பண்டைக்கால போர்த்துகீசிய நாட்டில் புகழ் பெற்ற 《ஹோமா வரலாற்று கவிதையை》விட பல நூறு ஆண்டுகள் முன்கூட்டியே மக்களிடையில் பிரபலமாகியிருந்தது.

இது சீன வரலாற்றில் முதலாவது கவிதைகள் கொண்ட தொகுதியாகும். கி.மு 11வது நூற்றாண்டு முதல் கி.மு 7வது நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் வெளியியான 305 கவிதைகள் இதில் சேர்க்கப்பட்டன. கவிதைகளின் வரலாறு 500 ஆண்டுகள் இருந்தன. இந்தக் கவிதை தொகுயி "புஃன்" "யா" "சங்"அதாவது "நாட்டுப்புறப் பாடல்" "சோ வம்ச பாடல்" "வழிபாட்டு மற்றும் பாராட்டுப் பாடல்"ஆகிய 3 பகுதிகள் உள்ளன. அப்போதைய 15 மன்னராட்சிகளில் பரவிய 160நாட்டுப்புற பாடல்கள் "நாட்டுப்புறப் பாடல் பகுதியில்" உள்ளன. சோ வம்ச பாயப் பகுதியில் 105 இசை பாடல்கள் சேர்க்கப்பட்டன. வஇப்பாடு மற்றும் பாராட்டு பாடல் பகுதியில் முந்தைய தலை முளையின் சாதனைகளையும் தெய்ங்களின் மாண்டிகளையும் போற்றும் 40 இரங்கல் பாடல்கள் உள்ளன.

வடிவத்தை பொறுத்தவரை, "கவிதைகள்" முக்கியமாக நாலு வாக்கியங்கள், இரண்டு வாக்கியங்கள், மூன்று வாக்கியங்கள், ஐந்து அல்லது ஆறு வாக்கியங்கள், என்ற வடிவில் கவிதைகள் இயற்றப்பட்டன. வாசிக்கும் போது ஓசைநயம் மேலோங்கியது. அம்சங்களை பார்த்தால் "புஃன்"பகுதி கவிதைத் தொகுப்பில் மிகச்சிறந்த பகுதியாகும். இதில் சேர்க்கப்பட்ட கவிதைகள் பலவும் மக்களிடையிடமிருந்து பெறப்பட்டவையாகும். அவை நேரடியானவை. சோ வம்சத்தில் சாதாரண உழைப்பாளர்களின் நடைமுறை வாழ்க்கையை இந்த கவிதைகள் சித்தரித்தன.

"கவிதை" யை படைத்தவர்கள் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்தவர். அவர்களில் உழைப்பாளர்கள், படைவீரர்கள், மேல் வர்க்கத்தைச் சேர்ந்தவர் முதலியோர் இடம் பெறுகின்றனர்.

தொகுதியில் சேர்க்கப்பட்ட படைப்புகள் முக்கியமாக பல்வேறு கொண்டாட்ட விழார்களில் பயன்படுத்தப்பட்டன. பாடுவதற்காக மக்களுக்கு வழங்கப்பட்டன. இரண்டாவதாக, பொழுதுபோக்கிற்காகவும். மூன்றாவதாக படைப்பாளர்கள் அப்போதைய சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பான அவர்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்காகவும் இயற்றப்பட்டன. காலமாகி பாடல் புத்தகம் மேல் இனத்தவர் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பாட்டு கருப் பொருளாகின. சீனாவின் மிக முக்கியமான சிறந்த படைப்புகளில் சேர்க்கப்பட்டது. இத்தகைய கல்வித் துறைக்கு மொழி அழகுப்படுத்தும் திறன் உண்டு. மறுபுறம், சமூக அரங்கில் கவிதைத் தொகுதியில் சேர்க்கப்பட்ட கவிதைகளை மக்கள் பயன்படுத்தி தமது கருத்தை வளைந்து கொடுக்கும் முறையில் தெரிவிக்கப்பட்டதாகும். "பாடல் புத்தகத்தை"படிக்காமல் இருந்தால் வாக்கியம் மக்கள் முன்னால் வர முடியாது என கன்பியூஸின் கூற்றை மேற்கோள் காட்டி பாடல் புத்தகத்தின் தகுநிலை பாராட்டப்பட்டது.

பொதுவாக கூறின் "பாடல் புத்தகத்தை"சீன பண்பாட்டு வரலாற்றின் துவக்கமாகும். சீன பண்பாடு மிக முன்னதாக வளர்ச்சியடைந்தற்கு அறிக்குறியாகும். அதன் அம்சங்கள் சீனாவின் முற்கால சமூக வாழ்க்கையின் பல்வேறு துறைகளுடன் தொடப்புடையவை. எடுத்துக்காட்டாக, உழைப்பும் காதலும், போரும் கூலியும், நெருக்கடியும் எதிர்ப்பும், பழக்கவழக்கமும் திருமணமும், முதியோருக்கு வழிபாடும் விருந்தும், வெப்ப் காலநிலை, நிலவியல், மிருகங்கள், தாவரங்கள் ஆகியவை கூட இந்த கவிதைத் தொகுதியில் குறிப்பிடப்பட்டன. கி.மு 11வது நூற்றாண்டு முதல் கி.மு.6வது நூற்றாண்டு வரையான சீனாவின் ஹைன் மொழியின் தோற்றத்தை ஆராய்வதற்கான முக்கிய பதிவேடாக "கவிதை" தொகுதி விளங்குகின்றது.


1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040