• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனப் பண்டைகால கவிதைகள்]

துறவி கவிர் து பு

சீனாவின் பண்பாட்டு வரலாற்றில் லீ, து என்பவர்கள் தாங் வம்சகாலத்தின் கவிதைகளின் மிக உயர்வாக மக்களால் அடிக்கடி பாராட்டப்பட்டனர்கள். லீ என்றால் உலகில் புகழ்பெற்ற கவிஞர் லீ பையாக குறிக்கின்றது. து என்றார், கவிதைத் துறையில் மூதாதையர் என போற்றப்ட்ட து பு என்பவரைக் குறிக்கப்படுகின்றது. து பு 712ம் ஆண்டில் பிறந்தார். அப்போது புகழ் பெற்ற கவிஞர் து சன் யெனின் பேரன். அவர் குழந்தை காலத்தில் புத்திசாலியாக இருந்தார். படிப்பதை மிகவும் விரும்பினார். குடும்பத்தின் பண்பாட்டுச் சூழலில் வளர்க்கப்பட்டதால் 7 வயதிலேயே கவிதை இயற்றத் துவங்கினார். வளர்ந்த பின் எழுதுவது, தீட்டுவது இசைப்பது, குதிரை ஏற்றம், வாள் வீச்சு போன்றவற்றில் அவருக்கு தேர்ச்சி பெற்றார். இளம் வயதில் அவருக்கு இனிமையான எதிர்கால நம்பிக்கை இருந்தது. 19 வயது அடைந்த போது அவர் ஊருக்கு வெளியே சென்றார். அப்போது செழுமையாக இருந்த தாங் வம்சகாலத்தில் து பு புகழ்பெற்ற பல இடங்களுக்குச் சென்று உலகத்தை அறிந்து கொண்டார்.

பல அறிஞர்களை போல து பு அரசியல் வாழ்க்கையில் இன்னல்களை சந்தித்தார். தேர்வுகளில் அவர் பல முறை தோல்வியடைந்தார். நடு வயதான து பு தாங் வம்சகாலத்தின் தலைநகரான சான் ஆன் நகரில் ஏழை வாழ்க்கை வாழ்ந்தார். ஆடம்பர வாழ்க்கையையும் ஏழை மக்களின் துன்ப வாழ்க்கையையும் கண்ட அவர் "கணக்காளர்களின் வாசல் முன்னால் மது கறி வீசும் மணமும் சாலையில் குளிர்காலத்தால் பலியாகிய ஏழை மக்களும்" என்று எச்சரிக்கை கவிதை எழுதினார். நடைமுறையான வாழ்க்கை அனுபவத்தை பெற்ற அவர் ஆதிக்கவாதிகளின் சீர்கேட்டையும் மக்களின் துன்பத்தையும் அறிந்து கொண்டு தேசத்தையும் மக்களையும் மற்றி கவலைப்பட்ட கவிளராக அவர் வளர்ந்தார்.

755ம் ஆண்டில் 43 வயதான து பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஒரு திங்கள் மட்டும் தாங் வம்சகாலத்தில் போர் வெடித்தது. அப்போது முதல் போர் தொடர்ந்தது. அவர் அலைந்து திரிய வேண்டியிருந்தது. நடைமுறையை மேலும் தெளிவாக அறிந்த கொண்ட பின் அவர் மக்கள் மீது அனுதாபத்தையும் போருக்கு எதிரான பகைமையையும் கொண்ட பல கவிதைகள் படைத்தார். இந்த கவிதைகளில் மண மக்களிடையில் பிரியாவிட, ஸுஹோ அதிகாரி, துங்கான் அதிகாரி போன்ற கவிதைகள் புகழ் பெற்றவை.

759ம் ஆண்டில் து பு அரசியல் மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்தார். அதிகாரி பதவியை துறந்தார். அப்போது சான் ஆன் வரட்சிக்குள்ளானது. அவர் வாழ வழிதேடி குடும்பத்தினருடன் சேர்ந்து சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள சன்துவுக்கு சென்றார். அங்கு நண்பர்களின் உதவியுடன் 4 ஆண்டுகளாக வாழ்க்கை நடத்தினார். அந்த கடினமான நிலையில் தம். பற்றி வர்ணிக்கும் கவிதை ஒன்றை எழுதினார். தம் தியாகத்தை அர்ப்பணித்து மக்களுக்கு இன்பத்தை எடுத்து சொல்லும் ஆர்வம் கவிதையில் காணப்பட்டது. கவிஞரின் புனித உணர்வை இது எடுத்துக்காட்டுகின்றது.

770ம் ஆண்டில் 59 வயதான து பு வறுமை நோய் ஆகியவற்றினால் நடுவழியில் மரணமடைந்தார். உலகத்திற்கு அவர் 1400க்கும் கவிதைகளை விட்டுச் சென்றார். தாங் வம்சம் போரினால் செழுமையிலிருந்து வறுமையாக இழந்த வரலாறு அவருடைய கவிதைகளில் விபரமாக வர்ணிக்கப்படுகின்றது. அவருடைய கவிதையின் வடிவம் அம்சங்கள் ஆகியவை கவிதை துறையில் மனிதருக்கு மிக செல்வாக்கை ஏற்படுத்தியது.

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040