• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனப் பண்டைகால கவிதைகள்]

ஒளிமயமான சீனத் தாங் வம்சகாலத்தின் கவிதைகள்

தாங் வம்சகாலம் சீன வரலாற்றில் முக்கியமானது. அப்போது பொருளாதார வளம் செழித்தோஹ்கியது. சமூகம் அமைதியாக இருந்தது. பண்பாட்டு மற்றும் கலைத் துறைகளில் சாதனைகள் படைக்கப்பட்டன. குறிப்பாக பண்டைய சீனாவின் கவிதைகள் பிரபலமடைந்திருந்தன. கவிதை இயற்றுவது தாங் வம்சகாலத்திந் சமூக பண்பாட்டு வாழ்க்கையில் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். மன்னராட்சி நிர்வாகத்தில் பதவி பெறுவதற்கு கட்டுரை எழுதுவதற்குப் பதிலாக கவிதை இயற்றத் தெரிந்திருக்க வேண்டும் எந்று பெறுவதாக மாற்றப்பட்டது. தாங் வமிசக் கவிதைகளில் சுமார் 2300 கவிஞர்கள் படைத்த சுமார் 50 ஆயிரம் கவிதைகள் இன்றைக்கும் இருக்கின்றன.

தாங் வம்சகாலத்தின் கவிதைகளின் வளர்ச்சியை துவக்க தாங் வம்சம், வளர்ச்சியடைந்த தாங் வம்சம், இடைக்கால தாங் வம்சம் மற்றும் பிற்கால தாங் வம்சம் என்று பிரிக்கலாம்.

துவக்க தாங் வம்சகாலம் 618 முதல் 718ம் ஆண்டுவரையாக நீடித்தது. அப்போது புகழ்பெற்ற நான்கு கவிஞர்களான வுவாங் போ, யான் ச்சுன், லுச்சோலின், தோப்பின்வுவாங் ஆகியோர் படிபடியாக கவிதைக் கலையை வளர்த்தனர். இதன் மூலம் சீனாவில் கவிதை ஒரு வடிவம் பெற்றது. அவர்களின் முயற்சி மூலம் தாங் வம்சகாலத்தின் கவிதைகளுக்கு ஒரு வடிவம் கிடைத்தது. கவிதையின் கருப் பொருள்கள் மனனர் மாளிகையிலிருந்து சமூகத்தின் மக்கள் வாழ்க்கை வரை பரவின. மென்மையான பாணியிலிருந்து வேகமான பாணிக்கு மாறியது. துவக்க தாங் வம்சகாலத்தில் புகழ்பெற்ற கவிஞர் சன் ச்சு ஞான் கவிதை படைக்கும் போது நடைமுறையான வாழ்க்கையை பிரதிபலிக்கும் சிறந்த பாரம்பரியத்தை நிலைநாட்ட வேண்டும் என்று அவர் கருதினார். அவருடைய கவிதைகள் ஆரோக்கியமாகவும் எளிமையாகவும் காணப்பட்டன. தாங் வம்சகாலத்தின் கவிதைகளின் வளர்ச்சிக்கு அவர் வழி காட்டினார்.

712 முதல் 762ம் ஆண்டு வரையான காலம் தாங் வம்சகாலத்தின் வளர்ச்சியடைந்த காலமாகும். அப்போது கவிதைகள் மிகவும் அதிகமாக படைக்கப்பட்டன. அந்தக் காலத்தில் கவிதையின் கருப்பொருட்கள் பல விதமாக இருந்தன. பல்வகை பாணியில் அமைந்த கவி பிரபலமடைந்தன. சிலர் கவிதை மூலம் இயற்கையை வர்ணித்தனர். சிலர் எல்லைப் பிரதேச வாழ்க்கையை வர்ணித்தனர். சிலர் வீரச் செயல்களைப் புகழ்ந்து பாடினர். சிலர் தோல்வி உணர்ச்சியை குறைகூறினர். பல கவிஞர்கள் கற்பனைக் கவிதைகளை தாங்களாகப் படைத்து உலகத்தை அதிர்ச்சியூட்டும் வகையில் வளர்ச்சியடைந்த தாங் வம்ச கவிதை சகாப்தத்தை உருவாக்கினர்.

வளர்ச்சியடைந்த தாங் வம்சகாலத்தில் மிக புகழ்பெற்ற கவிஞர்களில் லீ பெய், து பு, வுவாங் வெய், மன்ஹோரென், கோ ஷ், சன் சன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சன் சன் எல்லை பிரதேச வாழ்க்கையை வர்ணிக்கும் கவிதையினால் புகழ்பெற்றார். கோ ஷ்யின் கவிதைகளில் மக்களின் துன்பம் வர்ணிக்கப்பட்டது. தாங் வம்சகாலத்தின் வளர்ச்சியை யதார்த்தமாகச் சித்திரிக்கும் லீ பெய், துபு ஆகிய கவிஞர்களின் கவிதைகள் சீனாவின் பல தலைமுறைகளில் கவிதைப் படைப்பில் ஆழந்த செல்வாக்கை ஏற்படுத்தின.

இடைக்கால தாங் வம்சகாலம் 762 முதல் 827ம் ஆண்டு வரை நீடித்தது. அப்போது தலைசிறந்த கவிஞர்களாக அழைக்கப்பட்டவர்களில் பை ச்சு யின், யுவான் ச்சுன், லீ ஹு ஆகியோர் சிறப்பிற்குரியவர்கள். பை ச்சு யீனின் கவிதைகள் வேடிக்கையான பாணியில் அமைந்தவை. அவர் கவிதை மூலம் முரட்டுத்தனமான ஆட்சி முறைகளை சாடினார். தவிர, கவிதையின் வரிகளை மேலும் அதிக மக்கள் அங்கீகரிக்கப்பதற்காக அவர் மாபெரும் முயற்சிகளை எடுத்தார். ஆகவே அவருடைய கவிதைகள் ஏராளமான மக்களால் விரும்பப்பட்டன.

லீ ஹு குறுகிய காலமே வாழ்ந்த கவிஞர். அவருடை ஆயுள் 20 ஆண்டுகள் மட்டுமே. அவருடைய வாழ்க்கை மிகவும் துன்பமானது. ஆனால் அவருடைய கவிதைகள் மிகவும் கற்பனை வளம் மிக்கவை. கருத்துக்கள் மற்றவர்களின் கருத்துக்களிலிருந்து வேறுபட்டவை. அருமையான சொற்களும் கற்பனையும் அவருடைய கவிதைகளில் தனிச்சிறப்பாகூம்.

827 முதல் 859ம் ஆண்டு வரையான காலம் பிற்கால தாங் வம்சகாலமாகும். லீ சான் யின், து மு முதலிய கவிஞர்கள் அப்போது விறுவிறுப்பாக கவிதை படைத்தார்கள். து முவின் கவிதைகள் மென்மையும் கண்டிப்பும் இணைந்தவை. கவிதைகளின் மூலம் அரசியல் கருத்தையும் உணர்வையும் ஊட்ட இந்த கவிதைகள் ஏற்றவை. லீ சான் யின் கவிஞர் அருமையான சொற்களை கொண்டு தமது வாழ்க்கையின் இன்பத்தையும் துண்பத்தையும் வர்ணித்தார். அவருடைய தலைசிறந்த கவிதையான "தலைப்பின்மை" எனும் கவிதை காதல் பற்றியதா இல்லையா என்பது இதுவரை சீன கவிதை வட்டாரத்தில் சர்ச்சைக்குரியதாக கருதப்படுகின்றது.

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040