• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முக்கியப்படம்

• சீன வானொலியின் CIBN உருவாக்கம்
செய்திகள்
• சீன வானொலியின் CIBN உருவாக்கம்
சீன சர்வதேச வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவை 18ம் நாள் பெய்ஜிங்கில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. ஏறக்குறைய 70 ஆண்டுகால வளர்ச்சி வரலாறுடைய சீன வானொலி நிலையம் புதிய செய்தி ஊடகப் பாதையில் நுழைந்துள்ளதை இது வெளிப்படுத்துகிறது.
• சீன வானொலியின் CIBN உருவாக்கம்
CIBN எனப்படும் சீனச் சர்வதேச வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சேவை 18ம் நாள் பெய்ஜிங்கில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. ஏறக்குறைய 70 ஆண்டுகால வளர்ச்சி வரலாறுடைய சீன வானொலி நிலையம் புதிய செய்தி ஊடகத்தில் நுழைந்துள்ளதை இது வெளிப்படுத்துகிறது.
அறிமுகம்
• குவோ குவாங் Cibn
Guoguang பங்குகளைக் கட்டுப்படுத்துகின்ற கூட்டு நிறுவனம், சீன வானொலி நிலையத்தால் உருவாக்கப்பட்ட பண்பாட்டுத் துறையின் இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் மேடையாக திகழ்கிறது. இந்த மேடை மூலமாக, செய்தி ஊடகம் மற்றும் பண்பாட்டுத் துறையின் அளவை விரிவாக்கி, இத்துறையின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்ல சீன வானொலி நிலையம் முயற்சி செய்து வருகிறது.
புதிய ஊடகம்
புதிய செய்தி ஊடகத் துறையில் சீன வானொலி நிலையத்தின் வளர்ச்சிப் போக்கு
1998ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள் சீன வானொலி நிலையத்தின் இணைய தளம் அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டது. பின்னர், இந்த இணைய தளத்துக்கு "CRI Online" என்று பெயர் சூட்டப்பட்டது. நாட்டின் முக்கிய செய்தி இணைய தளங்களில் "CRI Online" சேர்க்கப்பட்டது. புதிய செய்தி ஊடகத் துறையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலான ஆராய்ச்சி மூலம், இது வரை சீன வானொலி நிலையம், உலகளவில் மொழிகள் மிக அதிகமான இணைய மேடையான CRI Onlineஐ தலைப்புப்பகுதியாக கொண்டு, பல மொழிகளின் இணைய தளங்கள் குழு, பல மொழிகளின் இணைய வானொலி குழு, பல மொழிகளின் இணைய தொலைக்காட்சி ஒளிபரப்பு, பல மொழிகளின் செல்லிடச் சேவை முனையம் ஆகியவையாக மாறியுள்ளது.
பல்லூடகம்
பல்லூடக வளர்ச்சி
2006ஆம் ஆண்டு ஜூலை திங்கள், சீன வானொலி நிலையம் சொந்தமாக வளர்த்த பல மொழிகளின் வலைப்பூ மேடையை வெளியிட்டது. சீன மொழி, ஆங்கில மொழி, கொரிய மொழி, ஜப்பானிய மொழி ஆகிய நான்கு மொழிகளின் இணைய வலைப்பூ சேவையைத் துவக்கியது. சீனாவில் சிறப்பு வானொலி நிலையம் வழங்கும் முதலாவது பன்மொழி வலைப்பூச் சேவை இணையதளம் இதுவாகும்.
மேலும்>>
இணையதளம்
இணையதளத்தின் வளர்ச்சிப் போக்கு
முன்பு, சீன வானொலி நிலையத்தில் 43 மொழிகளின் ஒலிப்பரப்புகள் செயல்பட்டன. அதன் பின், CRI Online எனப்படும் இணையதளம் 1998ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டபோது, சீனம், சீனாவின் கேண்டனீஸ், ஆங்கிலம், ஜெர்மனி, ஸ்பானிஷ் ஆகிய 5 மொழிகளின் இணையதளங்கள் முதலில் இயங்கத் துவங்கின.
மேலும்>>
நடவடிக்கைகள்
சீனர் அரங்கேற்றும் இந்திய பாடல் மற்றும் நடனப் போட்டி
நட்புப்பாடலைக் கூட்டாக பாடுவது, 2010 சீன-வியட்நாம் பாடல் போட்டி
வெளிநாட்டுப் பரிமாற்றம் பற்றிய பெரிய அளவு இணைய நடவடிக்கைகள்
நட்பார்ந்த நகரங்களின் தேர்வு, சீன உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நகரங்களுக்கிடை இணைய உரையாடல்
நான் பார்க்க விரும்புகின்ற நகரம்
சீனாவுடனான நட்பு பத்து சர்வதேச நண்பர்கள்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040