• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

• திபெத்தில் மிகக் குறைந்த வருமானம் பெற்ற தோ ஜீயின் நவீன பெரிய வீடு

சுமார் 70 வயதாகிய தோ ஜீ மிகக் குறைந்த வருமானம் பெற்றவர். அரசின் வாழ்க்கைக்கான குறைந்தபட்ச மானியத்தை பெறுகிறார். நாசு பகுதியில் மேற்கொண்டுள்ள 'புதிய வீடு பழைய வீட்டை மாற்றுதல்'எனும் பணித்திட்டத்தால், 200க்கு மேலான சதுர மீட்டர் பரப்பளவுடைய வீட்டிலே வசிக்கிறார். இந்தப் பணித்திட்டம் ச்சே சியாங் மற்றும் லியாவ் நீங் மாநிலங்களின் உதவியில் நடைமுறைப்படுத்துகிறது.

• திபெத்தின் காய்கறி மற்றும் பழங்களின் வளர்ப்பு

திபெத், சீனாவின் தென்மேற்கு எல்லையின் பீடபூமியில் பரந்து அமைந்துள்ளது. அதன் நெடுநோக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மத்திய அரசு திபெத் வளர்ச்சியில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றன.

1994ஆம் ஆண்டு மத்திய அரசு மூறாவது திபெத் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தியது. திபெத்துக்கு உதவி செய்யும் மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் முதலியவற்றிலிருந்து பலர் தேர்ந்தெடுக்கப்பட்டு திபெத்துக்குச் சென்றனர். அப்போது முதல் திபெத்துக்கு உதவி செய்யும் புதிய சுற்று திட்டப்பணி துவங்கியது.

கடந்த சில ஆண்டுகாலத்தில் திபெத் உள்ளூர் விவசாயிகள் காய்கறி பழங்களைப் பயிரிடத் தொடங்கினர். அவர்கள் வறுமை ஒழிந்ததோடு, குடிமக்களுக்கு மேலும் சிறந்த பொருட்களை வழங்கியுள்ளனர்.

• திபெத்தில் ஒரு பெரிய ரக சிமெண்ட் ஆலையின் அனுபவம்
மக்களின் கருத்தில் சிமெண்ட் தயாரிப்பு ஆலை, அதிக எரியாற்றலைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலைக் கடுமையாக மாசுப்படுத்தும் தொழில் நிறுவனமாகும். திபெத்தில் பெரிய ஒரு சிமெண்ட் தயாரிப்பு ஆலையைக் கட்டியமைப்பது ஒரு நல்ல செயல் அல்ல என்று பலர் கருதுவதுண்டு. ஆனால், திபெத்தில் சாலை, வீடு, அதிக அடிப்படை வசதி முதலியவற்றின் கட்டுமானத்துக்கு சிமெண்ட் மிகவும் தேவைப்படுகிறது. இந்த அதிக அளவு சிமெண்ட்யை உள் பிரதேசங்களிலிருந்து திபெத்துக்கு ஏற்றிச்செல்வது மிகமிக கடினம்.
• திபெத்தின் இடைநிலை கல்வி நிலைமை

சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் தரமான பள்ளி அதிகமில்லை. இதனால், குழந்தைகளை உள்பிரதேசத்தின் நகரங்களிலுள்ள இடைநிலை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று திபெத்தில் பெற்றோர் பலர் விரும்புகின்றனர். திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் கல்வித்துறை வழங்கிய தகவல்களின் படி, 1994ஆம் ஆண்டின் 3வது திபெத் பணிக்கூட்டம் முதல் இதுவரை, பல்வேறு மாநிலங்களும் நகரங்களும் திபெத்தின் கல்வி வளர்ச்சிக்கு மொத்தமாக 130 கோடி யுவான் உதவித்தொகையை வழங்கியுள்ளன. மேலதிகமான திபெத் குழந்தைகள் உள்ளூரில் இடைநிலை மற்றும் மேனிலை கல்வி முடித்த போதிலும், உள்பிரதேசங்களின் கல்வி உதவி, திபெத் நவீன கல்வி அமைப்பில் தொடர்ந்து முக்கிய பகுதியாகவுள்ளது.

உங்கள் கருத்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040