சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே, வுயுச்சு பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றார். திபெத் சென்று அங்குள்ள கட்டுமானத்தில் பங்காற்ற அவர் முடிவெடுத்தார். திபெத்தில் சீனாவிலுள்ள முதலாவது திபெத் எருமை அருங்காட்சியகத்தைக் கட்டியமைக்க, அவர் இரவு பகலாக பாடுபட்டுள்ளார். திபெத் எருமையின் பண்பாட்டைக் கண்டறிந்து பரப்புரை செய்வதில் அவரது விடா முயற்சி பல திபெத் இன மக்களை மனமுருகச் செய்துள்ளது.
தற்போது, பெய்ஜிங்கிலிருந்து வரும் வுயுச்சு க்கு அறுபது வயதாகிறது. அவர் திபெத்துக்கான பெய்ஜிங் உதவித் தலைமையகத்தின் துணை தலைவராவார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 11 திங்கள் அவர் திபெத்தில் வாழ்ந்து வருகிறார். லாசா நகரின் சாலையில், சரளமான திபெத் இன மொழி பேசிய அவர் திபெத் இனத்தவராகப் போல காணப்படுகிறார்.