• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தின் இடைநிலை கல்வி நிலைமை
  2014-08-28 14:42:16  cri எழுத்தின் அளவு:  A A A   
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் கல்வித்துறை வழங்கிய தகவல்களின் படி, 1994ஆம் ஆண்டின் 3வது திபெத் பணிக்கூட்டம் முதல் இதுவரை, பல்வேறு மாநிலங்களும் நகரங்களும் திபெத்தின் கல்வி வளர்ச்சிக்கு மொத்தமாக 130 கோடி யுவான் உதவித்தொகையை வழங்கியுள்ளன.

மேலதிகமான திபெத் குழந்தைகள் உள்ளூரில் இடைநிலை மற்றும் மேனிலை கல்வி முடித்த போதிலும், உள்பிரதேசங்களின் கல்வி உதவி, திபெத் நவீன கல்வி அமைப்பில் தொடர்ந்து முக்கிய பகுதியாகவுள்ளது.

சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் தரமான பள்ளி அதிகமில்லை. இதனால், குழந்தைகளை உள்பிரதேசத்தின் நகரங்களிலுள்ள இடைநிலை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று திபெத்தில் பெற்றோர் பலர் விரும்புகின்றனர். ஆனால், ஆண்டுதோறும், உள்பிரதேசத்தின் இடைநிலை பள்ளிகளின் திபெத் மாணவர் சேர்க்கைத் திட்டப்படி சுமார் 5000 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர். இதனால், பெரும்பாலான திபெத் மாணவர்களைப் பொறுத்தவரை, உள்பிரதேசத்துக்குச் சென்று படிப்பு வாய்ப்புப் பெறுவது மிக கடினம்.

திபெத்திற்கு உதவியளிக்க பல மாநிலங்களும் மாநகரங்களும் கல்வி உதவித்துறையில் அடிக்கடி சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மேலதிகமான திபெத் குழந்தைகள் திபெத்தில் தரமான இடைநிலை கல்வியைப் பெற முடியும்.

13 வயதான சியாங்பாஜீ, நாச்சு வட்டத்தின் ச்சேசியாங் இடைநிலை பள்ளியில் கல்வி பெற்றார். அவள் உள்பிரதேசத்தின் இடைநிலை பள்ளியில் சேர்த்து படிக்க வேண்டுமென அவருடைய பெற்றோர் விரும்புகின்றனர். ச்சேசியாங் மாநிலத்தின் உதவியுடன் நாச்சு வட்டத்தில் கட்டியமைக்கப்பட்ட ச்சேகியாங் இடைநிலைப்பள்ளியின் தரமான கல்வி நிர்வாகத்தை அறிந்த பிறகு, பெற்றோர் சியாங்பாஜீயை இப்பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்தனர்.

கடந்த ஓராண்டு காலத்தின் படிப்பு மற்றும் வாழ்க்கை நிலைமையைப் பற்றி குறிப்பிடுகையில், அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

இந்தப் பள்ளி நல்ல சூழ்நிலையைக் கொண்டது. ஆசிரியர்கள் பல்வேறு வட்டங்களிலிருந்து தேர்வு பெற்று சேர்கின்றனர். சரியான சிறப்பான வழிமுறையுடன் கல்வி தந்தனர். மேலும், பள்ளியிலிருந்து வீட்டுக்கு தூரமில்லை. வேந்தர் உற்சாகமானவர் ஆவார். பள்ளிக்கு வந்த முதல் நாளன்று, புதிய வீட்டுக்கு வருவதைப் போன்று, எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஓவிய புத்தகம், கணினி, பியானோ உள்ளிட்ட வசதிகள் நிறைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் பியானோ இசைக்கும் போது மாணவர்கள் பாடல் பாடுகின்றோம் என்று சியாங்பாஜீ கூறினார்.

நாச்சுவிலுள்ள ச்சேசியாங் இடைநிலை பள்ளி, 7 கோடியே 60 இலட்சம் யுவான் கூடுதலான முதலீட்டுடன், இரண்டு ஆண்டுக்காலமாக கட்டியமைக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டின் ஆக்ஸ்டு திங்கள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. அதன் மொத்த பரப்பளவு, 55 ஆயிரம் சதுரமீட்டராகும். தூய்மையான நேர்த்தியான தோற்றமுடைய கல்விக் கட்டிடம், ஓய்வு இல்லக் கட்டிடம், முன்னேறிய கல்வி வசதிகள், திறமையான ஆசிரியர் குழு ஆகியவை, இப்பள்ளியில் உள்ளன. தற்போது, 36 ஆசிரியர்களையும், 268 மாணவர்களையும் கொண்டுள்ள இந்தப் பள்ளி, நாச்சுப் பிரதேசத்தின் இடைநிலை பள்ளிகளில் மிக நன்றாக இருக்கிறது.

ச்சேசியாங் இடைநிலைப் பள்ளியின் வேந்தர் லோதன் பேசுகையில், நாச்சு பிரதேசம் ஒப்பீட்டளவில் வறுமையாகவும் பிந்தங்கிய நிலையிலும் உள்ளது. ஆண்டுதோறும் 100க்கு மேலான குழந்தைகள் உள்பிரதேசத்தின் இடைநிலைப் பள்ளியில் சேர்க்க விரும்புகின்றனர். இப்போது, வசதியான கல்வி நிர்வாகத்தைக் கொண்டுள்ள ச்சேசியாங் இடைநிலைப் பள்ளி, உள்ளூர் குழந்தைகளுக்கு மேலும் சிறப்பான படிப்புச் சூழ்நிலையை உருவாக்கி வழங்கலாம் என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

இப்பள்ளி துவங்கி இதுவரை, ஓராண்டு காலம் மட்டுமே ஆகி இருந்த போதிலும், உள்பிரதேசத்திலுள்ள இடைநிலை பள்ளிகளை விட தரமாக இருக்கிறது என்று மாணவரின் பெற்றோர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். முன்பு, திபெத்தில் இடைநிலை கல்வி நிலைமை, உள்பிரதேசத்தை விட பிந்தங்கியதாக இருந்தது. ஆனால், தற்போது, எமது பள்ளியின் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாண்டு, உள்பிரதேசத்தின் இடைநிலை பள்ளியின் சேர்க்கை தேர்வில் தேறிய பத்துக்கு மேலான மாணவர்கள், நாச்சுவில் தங்கி ச்சேசியாங் இடைநிலை பள்ளியில் படிக்க முடிவு செய்துள்ளனர். முன்பு, கட்டிடம், கல்வி வசதிகள் முதலியவற்றில் அதிகமாக முதலீடு செய்துள்ளோம். எதிர்காலத்தில், ஆசிரியர்களின் கல்வி அறிவு, நிர்வாக ஆற்றல், கல்வி கொடுக்கும் திறன் ஆகியவற்றை உயர்த்த முயற்சி செய்வோம் என்றார் வேந்தர்.

இப்பள்ளியில் படித்த மாணவர்களில் 80 விழுக்காட்டினர் விவசாய் மற்றும் ஆயர் குடும்பங்களைச் சேர்ந்தவர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின், மாணவர்களின் எண்ணிக்கை, 1200ஐ எட்டும் என்று வேந்தர் லோதன் முன்மதிப்பீடு செய்தார். மேலும், ஆசிரியர்களின் திறனை உயர்த்தும் வகையில், இப்பள்ளியின் ஆசிரியர்கள் ச்சேசியாங் மாநிலத்துக்கு அனுப்பப்பட்டு பயிற்சிப் பெறுவார்கள். அது மட்டுமல்ல, ச்சேசியாங் மாநிலத்தின் ஆசிரியர்களை நாச்சுவுக்கு அழைத்து, பரிமாறிக்கொள்ளத் திட்டமிட்டப்பட்டது என்றும் வேந்தர் லோதன் குறிப்பிட்டார்.

அண்மையில், பெய்ஜிங் மாநகரமும் சியாங்சு மாநிலமும் லாசா நகரத்தில் மேற்கொண்ட கல்வி உதவித் திட்டப்பணி மூலம், பல மாணவர்கள் உள்ளூர் இடைநிலை மற்றும் மேனிலை கல்வியை சீராக முடித்துக்கொண்டுள்ளனர். இவ்விரு இடங்களின் உதவியுடன், லாசாவில் தரமான கல்வி வசதிகள் கட்டியமைக்கப்பட்டது மட்டுமல்ல, புதுமை கல்வி கொடுக்கும் வழிமுறையும் கருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளன. சிறப்பான திறமைசாலி ஆசிரியர்கள் உட்புகுத்தப்பட்டுள்ளனர்.

பெய்ஜிங் மாநகரம் மற்றும் சியாங்சு மாநிலத்தின் உதவியுடன் கட்டியமைக்கப்பட்டுள்ள லாசாவின் பெய்ஜிங் சோதனை மேனிலை பள்ளியும், சியாங்சு சோதனை மேனிலை பள்ளியும், இவ்வாண்டு செப்டெம்பர் திங்கள் துவக்கத்தில் புதிய மாணவர்களை வரவேற்கவுள்ளன. இதில், பெய்ஜிங் மாநகரம் பெய்ஜிங் சோதனை மேனிலை பள்ளிக்கு 26 கோடியே 40 இலட்சம் யுவான் முதலீடு செய்தது. இவ்வாண்டு உள்ளூர் மேனிலை மாணவர்கள் 3100 பேர் அழைத்துச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. சியாங்சு சோதனை மேனிலைப் பள்ளிக்கு, சியாங்சு மாநிலம் 24 கோடி யுவான் முதலீடு செய்தது. இவ்வாண்டு அது 3000 உள்ளூர் மாணவர்களைச் சேர்க்கும் என்று தெரிகிறது.

மேற்கூறிய இரு பள்ளிகளின் அடிப்படை கல்வி வசதிகள் உள்ளூரில் முன்னேறிய நிலையில் உள்ளன. அதன் வேந்தர்கள், முக்கிய ஆசிரியர்கள் ஆகியோர் பெய்ஜிங் மற்றும் சியாங்சுவிலிருந்து நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். உள்பிரதேசத்தின் சிறப்பான கல்வி அனுபவங்களை பீடப்பூமிக்கு கொண்டு வருவது, அவர்களின் கூட்டு இலக்கமாகும். இது குறித்து, சியாங்சு சோதனை மேனிலை பள்ளியின் துணை வேந்தர் சியு சீஃபாங் கூறியதாவது:

திபெத்துக்கான கல்வி உதவி பற்றிய நடவடிக்கை மிகவும் நன்று! முன்பு, திபெத்தின் மாணவர்கள் உள்பிரதேசத்துக்குச் சென்று கல்வி பயின்றனர். பிறகு, தலைச்சிறந்த தேர்வுச் சாதனையுடன் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் நுழைந்தனர். ஆனால், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கல்வி நிலைமை குறிப்பிட்ட அளவில் உயரவில்லை. இப்போது, உள்பிரதேசத்தின் ஆசிரியர்களை திபெத்துக்கு அனுப்புவதன் மூலம், முன்னேறிய நிர்வாக அனுபவங்கள், கல்வி திறமை, கருத்து ஆகியவற்றை திபெத் ஆசிரியர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம். திபெத் ஆசிரியர்களின் ஆற்றலின் உயர்வு, தலைச்சிறந்த திறமைசாலிகளைப் பயிற்றுவதற்குத் துணைபுரிவது மட்டுமல்ல, பின்தங்கிய நிலையில் இருக்கும் திபெத்திய கல்வி நிலைமையையும் அடிப்படையில் மாற்றும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது, துணை வேந்தர் சியு சீஃபாங் பள்ளியின் மற்ற தலைவர்களுடன் இணைந்து, திட்டத்தை வகுத்து வருகிறார். உள்ளூர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார். பாட தவணைக்கும் ஒவ்வொரு பாடமும் வெளிப்படையான மாதிரி பாடத்தை வழங்கி, பாடத்துக்கு ஆயத்தமாதல், பாடம் சொல்லும் வழிமுறை முதலிய அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். இளம் ஆசிரியர்களிடை பாடம் சொல்லும் போட்டி நடைபெறும். அனைத்து ஆசிரியர்களும் பல்லூடகம் மூலம் பாடம் சொல்ல முடியும் என்பன இத்திட்டத்தில் இடம்பெறுகின்றன.

திபெத்தின் கல்வி வளர்ச்சி, நடுவன் அரசு, பிற மாநிலங்கள் மற்றும் நகரங்களின் ஆதரவுடன் தொடர உள்ளது. சியாங்பாஜி உள்ளிட்ட திபெத் மாணவர்களின் கல்வி பயிற்சிக்கு சீரான வாய்ப்புகளை உருவாக்கி வழங்க வேண்டுமென வேந்தர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040