• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் ஒரு பெரிய ரக சிமெண்ட் ஆலையின் அனுபவம்
  2014-08-27 16:55:33  cri எழுத்தின் அளவு:  A A A   

தொழிற்துறையின் வளர்ச்சியுடன் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். பொருளாதார வளர்ச்சியுடன் மக்களின் வாழ்க்கை தரமும் மேம்படுத்தலாம். திபெத்தில் மாபெரும் வளர்ச்சி அடைவதற்கு வலுவான தொழில் ஆதரவுத் தேவைப்படுகிறது. ஆனால், திபெத்தின் உயிரின வாழ்க்கை சூழல் மிகவும் வலுவற்றது. பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் போது உயிரின வாழ்க்கைப் பாதுகாப்பை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இன்றைய நிகழ்ச்சியில் குவான் சின் எனும் சிமெண்ட் தயாரிப்பு ஆலையை எடுத்துக்காட்டி ஒரு வெற்றிகரமான வளர்ச்சி மாதிரியை அறிமுகப்படுத்துகின்றேன்.

மக்களின் கருத்தில் சிமெண்ட் தயாரிப்பு ஆலை, அதிக எரியாற்றலைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலைக் கடுமையாக மாசுப்படுத்தும் தொழில் நிறுவனமாகும். திபெத்தில் பெரிய ஒரு சிமெண்ட் தயாரிப்பு ஆலையைக் கட்டியமைப்பது ஒரு நல்ல செயல் அல்ல என்று பலர் கருதுவதுண்டு. ஆனால், திபெத்தில் சாலை, வீடு, அதிக அடிப்படை வசதி முதலியவற்றின் கட்டுமானத்துக்கு சிமெண்ட் மிகவும் தேவைப்படுகிறது. இந்த அதிக அளவு சிமெண்ட்யை உள் பிரதேசங்களிலிருந்து திபெத்துக்கு ஏற்றிச்செல்வது மிகமிக கடினம்.

குவா சின் சிமெண்ட் பங்குப்பத்திர குழுமம் ஹு பெய் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கூட்டு நிறுவனமாகும். சீனாவில் மிகப் பெரிய 500 தொழில் நிறுவனங்களில் இது ஒன்றாகும். 2003ஆம் ஆண்டு திபெத்துக்கு உதவி அளிக்கும் முக்கிய திட்டப்பணிகளில் ஒன்றாக குவா சின் நிறுவனம் திபெத்தின் லோக்கா பிரதேசத்தில் முதலீடு செய்து சிமெண்ட் ஆலையை கட்டியமைக்கத் தொடங்கியது. 2005ஆம் ஆண்டு ஜுலை திங்கள் உற்பத்தி செய்ய துவங்கியது. அதே ஆண்டின் இறுதியில் லாபம் கிடைத்துள்ளது. பிறகு திபெத்தின் வேகமான வளர்ச்சியுடன், குவா சின் சிமெண்ட் ஆலையும் சிறப்பாக வளர்ந்து வருகிறது. இவ்வாண்டு அதன் உற்பத்தி ஆற்றல் 13 இலட்சம் டன் எட்டக் கூடும் என்று தெரிகிறது.

மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகாலத்தில், குவா சின் சிமெண்ட் ஆலை லோக்கா பிரதேசத்துக்கு 48 கோடி யுவான் வரி வழங்கியது. சுமார் 650 வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அவை உள்ளூர் பொருளாதார வளர்ச்சியில் அதிக பங்காற்றியுள்ளன. உள்ளூர் திபெத் மக்களின் வாழ்க்கையும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

குவா சின் சிமெண்ட் ஆலையில் மூன்றில் இரு பகுதி பணியாளர்கள் உள்ளூர் திபெத்தின மக்களாவர். 35 வயதான பாய்மாஜுவாங் கூறியதாவது

2005ஆம் ஆண்டுக்கு முன் நான் ஒரு சிறிய சிமெண்ட் ஆலையில் பணியாற்றி, திங்களுக்கு சுமார் 1000 யுவான் சம்பளம் கிடைத்துள்ளது. தற்போது சம்பளம் 10 ஆயிரம் யுவானுக்கு மேலாகும். என் மனைவியும் குவா சின் நிறுவனத்தில் சேர்ந்தார். ஒரு சிறிய காரை வாங்கினோம். புதிய வீட்டையும் கட்டியமைத்துள்ளோம்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040