திபெத், சீனாவின் தென்மேற்கு எல்லையின் பீடபூமியில் பரந்து அமைந்துள்ளது. அதன் நெடுநோக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மத்திய அரசு திபெத் வளர்ச்சியில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றன. 1994ஆம் ஆண்டு மத்திய அரசு மூறாவது திபெத் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தியது. திபெத்துக்கு உதவி செய்யும் மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் முதலியவற்றிலிருந்து பலர் தேர்ந்தெடுக்கப்பட்டு திபெத்துக்குச் சென்றனர். அப்போது முதல் திபெத்துக்கு உதவி செய்யும் புதிய சுற்று திட்டப்பணி துவங்கியது. அது, திபெத் உதவி பணிக்கு மைல் கல்லாக மாறியுள்ளது. இன்று காய்கறி மற்றும் பழ வளர்ப்பு திபெத் மக்களுக்கு ஏற்படுத்திய நலன் குறித்து அறிந்து கொள்ளலாமா?
சில ஆண்டுகளுக்கு முன் காய்கறிகளும், பழங்களும் வேறு மாநிலங்களிலிருந்து சீன திபெத்தின் லாசா நகரிலுக்கு ஏற்றிச்செல்லப்பட்டன. இதனால் காய்கறி மற்றும் பழத் தரம் குறைவு, விலை அதிகம் என்பது ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகாலத்தில் திபெத் உள்ளூர் விவசாயிகள் காய்கறி பழங்களைப் பயிரிடத் தொடங்கினர். அவர்கள் வறுமை ஒழிந்ததோடு, குடிமக்களுக்கு மேலும் சிறந்த பொருட்களை வழங்கியுள்ளனர்.