கலை........ஆமாம். போராட்டத்தில் வட கொரிய மக்களுக்காக உயிரை தியாகம் செய்த சீன படைவீரர்களை நினைவு கூரும் வகையில் அக்டோபர் 24ம் நாளிரவு பியோங்யாங் மக்கள் பண்பாட்டு மாளிகையில் மாபெரும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழன்பன்....... சீன மக்கள் தொண்டர் படைவீரர்கள் வட கொரியாவின் போரில் பங்கு கொண்டமை, அதன் போர்தந்திர மற்றும் வரலாற்று முக்கியத்துவம் இவற்றை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள்?
கலை........மதிப்பீடு செய்வதற்கு முன் முதலில் இவ்வொலியை கேளுங்கள்.
1950ம் ஆண்டு ஜுன் திங்கள் 25ம் நாள் வட கொரிய போர் மூண்டது. அப்போது அமெரிக்க அரசுத் தலைவராக பணிபுரிந்த harvy Truman இப்போரில் தலையிட வட கொரியாவுக்கு படைப் பிரிவுகளை அனுப்புவதை அறிவித்தார். அத்துடன் அமெரிக்காவின் 7வது போர் கப்பல் அணியும் சீனாவின் தைவானுக்கு அனுப்பப்பட்டது. செப்டம்பர் 15ம் நாள் 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க படையினர்கள் வட கொரியாவில் நுழைந்த வேளையில் அமெரிக்க போர் விமானங்கள் பல முறை சீன வான்பரப்பில் ஊடுருவி தான்துங் பிரதேசத்தின் மீது தாக்குதல் நடத்தின. போர் தீ Yalu ஆற்றின் கரையில் பரவியது.