கலை........ ஆமாம். என்னை போன்று 50ம் ஆண்டுகளில் பிறந்து வளர்ந்தவர்கள் அப்போதைய வரலாற்றை மறக்கவே முடியாது. அந்த போரில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேலான சீன படைவீரர்கள் தியாகம் செய்தனர். போரின் போது குடிநீர் இல்லாத நிலையில் மலைகற்பாறையிலிருந்து தண்ணீர் குடிக்க நீர் குடி எனக்கு வேண்டாம் என்பதாக தியாக மனதோடு செயல்பட்டனர். தந்தை போர் தளத்தில் தன்னை தியாகம் செய்த பின் மகன் அவரது இலட்சியத்தை ஏற்றுக்கொண்டார். அண்ணன் தம்பி அவர்களைப் பின்பற்றி அக்கா தங்கை போரில் சகோதரர்களின் இலட்சியத்தை வெளிக்கொணர்ந்தனர்.
தமிழன்பன்....... மறக்க முடியாத பாராட்டத்தக்க இவ்வளவு தகவல்களை கேட்ட பின் சீனாவுக்கும் வட கொரியாவுக்குமிடை நட்பு உண்மையாகவே வரலாற்றை தாக்குபிடிக்க காரணம் புரிகின்றது. ஆகவே அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து வட கொரியாவுக்கு உதவி வழங்க படையினரை சீனா அனுப்பியதை முழுமையாக புரிந்து கொண்டுள்ளேன். சீன-வட கொரிய நட்பு நீடுழி வாழ்க என்று நான் வாழ்த்துகின்றேன்.
கலை........ சரி நேயர் நண்பர்களே. குறுகிய நேரத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து வட கொரியாவுக்கு உதவி வழங்கிய போரின் 60வது ஆண்டு நிறைவு பற்றிய விளக்கத்தை கேட்டீர்கள்.
தமிழன்பன்.......கேட்ட பின் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
கலை........நிகழ்ச்சியை கேட்டதற்கு மிக்க நன்றி.
தமிழன்பன்.......இத்துடன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.
கலை........அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம். வணக்கம் நேயர்களே.