Friday    Apr 11th   2025   
• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து வட கொரியாவுக்கு உதவி வழங்கும் போராட்டம்
  2010-11-01 09:54:18  cri எழுத்தின் அளவு:  A A A   

தமிழன்பன்....... இதற்கிடையில் 24ம் நாளிரவு பியோங்யாங் மக்கள் பண்பாட்டு மாளிகையில் வட கொரிய அரசு பிரம்மாண்டமான விருந்து அளித்தது.

கலை........ வட கொரிய தலைமை அமைச்சர் ச்சையூன்லிங், அதியுயர் மக்கள் அவையின் நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவர் யாஹென்சிக் முதலியோர் விருந்தில் கலந்து கொண்டனர்.

தமிழன்பன்....... வட கொரியாவிலுள்ள பல குன்றுகளிலும் மலைகளிலும் சீன மக்கள் தன்னார்வத் தொண்டர் படைவீரர்களின் இரத்தம் சிந்தியது. வட கொரிய மக்கள் அவர்களின் துணிவான பங்கை மறக்கவேயில்லை. பல்வகை வரலாற்றுச் சோதனைகளைத் தாக்குபிடித்த வட கொரிய-சீன நட்பு காலத்தையும் நூறு ஆண்டுகளையும் தாண்டி வெளிக்கொணர்ந்து வளர்க்க பாடுபடுவோம். இது வட கொரிய கட்சியும் அரசும் மேற்கொள்ளும் நிலையான நிலைப்பாடாகும் என்று துணைத் தலைவர் யான் ஹென் சிக் விருந்தில் கலந்து கொண்டு உரைநிகழ்த்திய போது தெரிவித்தார்.

கலை........ அவரது உரை மக்களை மனமுருகச் செய்த்துள்ளது.

.......................இசை..................

தமிழன்பன்....... கலை எனக்கொரு ஐயம் உள்ளது.

கலை........ சொல்லுங்கள்.

தமிழன்பன்.......நவ சீனா 1949ம் ஆண்டு அக்டோபர் முதல் நாள் உலகத்திற்கு தனது நிறுவுதலை அறிவித்தது. அப்போது சீனாவின் பொருளாதாரம் அவ்வளவு வலிமையானதாக இருக்கவில்லை. அத்தகைய சூழலில் வட கொரியாவுக்கு உதவ அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் சீனாவுக்கு என்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கும்?

கலை........ நீங்கள் கேட்பது நூற்றுக்கு நூறு சரிதான். குழந்தைப்பருவத்தில் சீன மக்கள் தன்னார்வத் தொண்டர் படைவீரர்கள் வட கொரியாவில் அமெரிக்க படைப் பிரிவுகளை தாக்கும் திரைப்படங்களை பார்த்தேன். சீனா சுதந்திரமடைந்த ஓராண்டுக்கு பின் தான் எதிர்பாராத அண்டை நாடுகளின் இன்னல்களை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வட கொரியாவுக்கு உதவாமல் இருந்தால் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் வட கொரியாவை இடம் கொண்ட பின் சீனாவை இலக்காக்கியிருப்பர். ஆகவே அந்த சூழ்நிலையில் தலைவர் மாவ் நாடு முழுவதற்கும் வட கொரியாவுக்கு உதவும் கொள்கைத் தீர்மானத்தை அறிவித்தார்.

தமிழன்பன்....... அவருடைய வேண்டுகோளுக்கு சீன மக்கள் எத்தகைய மனப்பான்மையை வெளிக்காட்டினர்?

கலை........ அப்போது நான் பிறக்கவில்லை. ஆனால் தந்தை தாய் மற்றும் மூத்தவர்கள் சொன்ன கதைகளை கேட்ட பின் இந்த போரில் கலந்து கொண்ட முக்கியத்துவத்தை அறிந்து கொண்டேன். சீனா முழுவதிலும் மக்கள் அணிதிரட்டப்ப்டடனர். அப்போது சீனாவில் புகழ்பெற்ற கலைஞர்கள் விமானம் ஒன்றை வாங்கக் கூடிய அளவு பணத்தொகையை நன்கொடையாக வழங்கினர் என்ற எடுத்துக்காட்டுகள் மக்களிடையில் பரவலாக அறியப்பட்டன.

தமிழன்பன்....... ஓ. எனக்கு புரிந்தது. நவ சீனாவில் மக்கள் நன்றாக அணிதிரட்டப்பட்டால் எத்தகைய இன்னல்களும் சிறிதாகிவிடும். சீனா வட கொரியாவுக்கு உதவி வழங்காமலிருந்தால் போர் தீ கண்டிப்பாக சீனாவுக்கும் பரவியிருக்கும் என்பதில் ஐயமே இல்லை.

கலை........ ஆகவே அப்போது வட கொரியாவுக்கு உதவி வழங்குவது சீன மக்கள் தங்களுக்கு தாங்களே உதவி வழங்குவது போல் என்று பொருள்படுகின்றது. சீன மக்களிடையில் என்றுமே மறக்க முடியாத பதிவாக தலைவர் மாவின் மூத்த மகன் மா என் யிங் அப்போது சீன மக்கள் தன்னார்வத் தொண்டர் படையில் சேர்ந்தார். 1950ம் ஆண்டு நவம்பர் 25ம் நாள் இரண்டாவது தாக்குதல் துவங்கிய நாளன்று அவர் அமெரிக்க விமானங்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். வேதனைச் செய்தி தலைவர் மாவுக்கு வந்த போது அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை வட கொரியாவிலிருந்து விரட்டியடிக்கும் அவரது மனவுறுதி கொஞ்சமும் அசையவில்லை.

தமிழன்பன்....... தலைவரின் மகனே போரில் கலந்து கொள்ள அனுப்பப்பட்டார் என்பது வியப்பான தகவல். சாதாரண மக்களிடையில் கண்டிப்பாக வீரம் மிக்க கதைகள் உண்டு.

கலை........ மேற்கூறிய கலைஞர்கள் விமானத்தை வாங்க நன்கொடை வழங்கிய கதையை தவிர, அப்போது சீனா முழுவதிலும் அமெரிக்காவை வட கொரியாவிலிருந்து விரட்டியடிக்கும் எண்ண அலைகள் பொங்கின. இளம் மக்கள் படையில் சேர விண்ணப்பம் செய்தனர்.

தமிழன்பன்....... shang gan ling என்னும் திரைப்படம் என் ஞாபகத்தில் ஆழமாக பதிந்து விட்டது. இது சீன வீரர்கள் வட கொரியாவில் நிகழ்ந்த போரில் கலந்து கொள்வது பற்றிய திரைப்படமாகும்.

<< 1 2 3 4 5 >>
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040