தமிழன்பன்.......அந்த சூழ்நிலையில் உதவிக்கு படையினரை அனுப்புமாறு வட கொரிய அரசு அக்டோபர் 8ம் நாள் சீனாவுக்கு வேண்டுகோள் விடுத்தது தானே.
கலை........ஆமாம். வட கொரிய அரசின் கோரிக்கையின் படி "அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து வட கொரியாவுக்கு உதவி வழங்குவதன் மூலம் தாயகத்தை பாதுகாப்பதென்ற"கொள்கைத் தீர்மானத்தை சீன அரசு மேற்கொண்டது.
தமிழன்பன்.......1950ம் ஆண்டு அக்டோபர் 25ம் நாள் வட கொரியாவில் நுழைந்த சீன மக்கள் தொண்டர் படைவீரர்கள் அமெரிக்கப் படைபிரிவுக்கு எதிரான போரை துவக்கினர். அந்த எதிர்ப்புப் போரில் சீன மக்கள் தொண்டர் படைவீரர்கள் எத்தனை அமெரிக்க படையினரை கொன்றனர்?
கலை........ அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து வட கொரியாவுக்கு உதவி வழங்கும் நீதியான போரில் 3 லட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க படையிர்கள் கொல்லப்பட்டனர்.
தமிழன்பன்.......சீன மக்கள் தொணடர் படைப் பிரிவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டதா?
கலை........ஆமாம். போரில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் சீன மக்கள் தொண்டர் படைவீரர்கள் உயிரிழந்தனர்.
தமிழன்பன்.......இந்த போர் எப்போது முடிவுக்கு வந்தது?
கலை........1953ம் ஆண்டு ஜுலை 27ம் நாள் போரிட்ட இருதரப்பும் வட கொரிய போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டன.
தமிழன்பன்.......ஆக 2 ஆண்டுகள் 9 திங்கள் காலம் நீடித்திருந்த அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக வட கொரியாவுக்கு சீனா உதவிய போர் நிறைவடைந்தது.
கலை........இந்த போர் பற்றி மதிப்பிட்ட போது அமெரிக்க முப்படைத் தலைவர் குழுவின் தலைவர் F.H. Bradley வட கொரிய போர் தவறான நேரத்தில், தவறான இடத்தில் நடந்த தவறான போர் என்று கூறினார்.
தமிழன்பன்.......60 ஆண்டுகள் கழிந்து விட்டன. அப்போரில் சீனாவும் வட கொரியாவும் இரத்தத்தினால் ஆழ்ந்த வரலாற்று நட்பை உருவாக்கின.
கலை........ஆகவே வட கொரியாவுக்கு உதவிய 60 ஆண்டுகளுக்கு முந்தைய அக்டோபர் 25ம் நாள் இருதரப்பின் வரலாற்றுத் தன்மை வாய்ந்த நாளாகும்.
தமிழன்பன்.......இந்த பிரம்மாண்டமான நினைவு நாளை முன்னிட்டு இரு நாடுகள் எத்தகைய கொண்டாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டன?
கலை........நினைவு நாட்களில் குறிப்பாக இவ்வாண்டான 60வது ஆண்டு நினைவு நாட்களில் வட கொரியா பிரம்மாண்டமான கொண்டாட்ட நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தது.
தமிழன்பன்....... விபரமாக குறிப்பிடுங்களே!
கலை........ சரி. தெ லோதுங் சிம்பு என்னும் செய்தியேடு "வட கொரிய-சீன நட்பு வரலாற்றில் மகோன்னத விருப்பம் போன்ற வரலாற்று கவிதை"என்ற தலைப்பில் கட்டுரைகளை வெளியிட்டது. கட்டுரைகளின் மூலம் இரு நாட்டு நட்பும் மதிப்பிடப்பட்டு பாராட்டப்பட்டது. அத்துடன் சீனாவின் தன்னார்வத் தொண்டர் படைவீரர்களின் வரலாற்றுச் சாதனைகள் பாராட்டப்பட்டன.