• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பூசியென் ஏரி
  2012-02-23 16:42:54  cri எழுத்தின் அளவு:  A A A   

 சொர்க்கத்தில் 2 கடவுள்கள் இந்த ஏரியை பற்றிக் கேள்விப்பட்டு அதனார் ஈர்க்கப்பட்டு இங்கு வந்தனர். ஏரிக்கு வந்த பிறகு அழகான காட்சியால் அவர்கள் ஆழமாக கவரப்பட்டனர். அவர்கள் ஏரியை விட்டுச் செல்ல விரும்பவில்லை. ஒருவரின் கைகளை மற்றொருவரின் தோள்களில் வைத்து கற்களாக மாறினர். எனவே இந்த ஏரி, பூசியென் ஏரி என்று அழைக்கப்படுகிறது. பூசியென் என்பது சீன மொழியில் கடவுளை தொடுவதை குறிப்பிடுகிறது என்று அவர் கூறினார்.

பூசியென் ஏரி, சீனாவின் தலை சிறந்த நீர் தரமுடைய ஏரிகளில் ஒன்றாகும். இங்குள்ள சுற்றுச்சூழலையும் தூய்மையான நீரையும் பாதுகாக்க, உள்ளூர் அரசு பல கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இங்குள்ள வாழ்க்கை கழிவு நீர், ஏரியில் வெளியேற்றப்படுவதற்கு அனுமதி இல்லை. அரசு அதிக ஒதுக்கீடு செய்து வசதிகளைக் கட்டியமைத்து இங்குள்ள கழிவு நீரை மலைகளுக்குக் கொண்டு சென்று அப்புறப்படுத்துகிறது. இப்படி செய்வதால் மலைகளிலுள்ள விளைநிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்கும் அதேவேளை ஏரி நீர் மாசுபடுவதும் தடுக்கப்படுகிறது. உள்ளூர் கிராமவாசிகள் பூசியென் ஏரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்கின்றனர். இங்குள்ள தூய்மையான காட்சியால் அவர்கள் பெருமையையும் சுயநம்பிக்கையையும் பெறுகின்றனர். Lu xiaoze என்பவர், ஒரு சிறிய உணவகத்தின் உரிமையாளர். அவர் இங்குள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கூறியதாவது

1 2 3 4 5 6
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040