• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹுவா யோ தெய் இனம்
  2012-02-23 16:34:32  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹுவா யோ தெய் இனம், சீனாவின் தெய் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறப்பான கிளையாகும். இவ்வின மக்கள் யுன்னான் மாநிலத்தில் குழுமி வாழ்கின்றனர். அவர்கள் வண்ண ஆடைகளையும் வெள்ளி நகைகளையும் அணிந்து வண்ணமான இடை வாரைக் கட்டுகின்றனர். இவ்வினம் இதனாலேயே இந்த பெயருடன் அழைக்கப்படுகிறது. ஹுவா யொ என்றால், சீன மொழியில் வண்ணமான இடை என்று பொருள்.

இவ்வினத்தின் பாரம்பரிய ஆடைகள், மிக அழகானவை. ஆனால் அவற்றை அணிவது கடினமானது. அனுபவம் மிக்கவரின் உதவியுடன், ஒரு தொகுதி ஆடைகளை அணிய, ஒரு முற்பகல் அளவுக்கு நேரம் தேவைப்படும். இவ்வினத்தின் பெண்கள், குழந்தை பருவம் முதலே துணி நெசவையும் பூத்தையல் வேலையையும் கற்றுக்கொள்ள வேண்டும். திருமணம் செய்யும் போது அவர்கள் அணிகின்ற மணமகளுக்கான ஆடைகள், தானாகவே தயாரிக்கப்பட வேண்டும். பெண்களின் தாய்கள், மகள் பிறந்தவுடன் அவருக்கு திருமண ஆடைகளை ஆயத்தபடுத்தத் தொடங்கி விடுகின்றனர். ஒரு ஹுவா யோ தெய் இனப் பெண்ணை பொறுத்தவரை, அவரது திருமண ஆடை, அவரது வாழ்க்கையில் மிக பெரும் படைப்பாக கருதப்படுகிறது.

இலையுதிர்காலத்தின் பிற்பகலில் சூரியக் கதிர் வீசுகிறது. 76 வயதான யாங் சோயிங், நாற்காலியில் உட்கார்ந்து மகிழ்ச்சியாக பாடியதோடு கோடுகளைச் சீர்படுத்தி துணி நெசவுக்காக ஆயத்தப்படுகிறார். 12 வயதில் அவர் கோடுகளைப் பிரிக்கக் கற்றுகொண்டார். ஹுவா யோ தெய் இனத்திற்கு, சொந்த எழுத்துகள் இல்லை. எனவே, நெசவும் பூத்தையல் வேலையும் கைகள் மூலம் மட்டும் பரவுகின்றன. அவரது வேலைப்பாடு தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து பரவ வேண்டும் என்று யாங் சோயிங் அம்மையார் விருப்பம் தெரிவித்தார்.

1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040