• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹுவா யோ தெய் இனம்
  2012-02-23 16:34:32  cri எழுத்தின் அளவு:  A A A   

எனது தாய் சிறுவயது முதல் துணி நெசவைக் கற்றுக்கொண்டார். அவர் இவ்வேலைப்பாடில் வல்லுநர். ஆனால் அவரது வேலைப்பாட்டை கற்றுணராமல் போனதில் எனக்கு மிக வருத்தம். நான் தெய் இனப் பெண். தலைமுறை தலைமுறையாகப் பரவிய இந்த வேலைப்பாட்டை நான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

பாரம்பரிய வேலைப்பாட்டை வெளிக்கொணர்வ கொடர்பான பிரச்சினையைத் தீர்க்க, யின் பீங் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. பணியாளர்களைத் திரட்டி சீன மொழி எழுத்துகளின் மூலம் வேலைப்பாடுகளைப் பதிவேற்றியது. பூத்தையல் வல்லுனர்கள் அழைக்கப்பட்டு ஒரு பயிற்சி வகுப்பைத் திறந்து இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கின்றனர்.

24 வயதான பெய் ஷோஃபாங், பயிற்சி வகுப்பின் ஏற்பாட்டுக்கும் கைவினை வளர்ச்சிச் சங்கத்தின் பரப்புரைப் பணிக்கும் பொறுப்பானவர். 2 ஆண்டுகளுக்கு முன் அவர் வெளியில் ஆடை விற்பனையில் ஈடுபட்டார். ஊரில் ஹுவா யோ தெய் கைவினை வளர்ச்சி சங்கம் நிறுவப்பட்டதென்ற செய்தியைக் கேட்ட பின் அவர் மகிழ்ச்சியடைந்தார். பாரம்பரிய பண்பாடில் அவருக்கு ஆர்வம் மிகுதி. எனவே, அவர் இனத்தின் வேலைப்பாட்டின் பரவல் பணியில் பங்கெடுக்க விரும்புகிறார். ஊருக்குத் திரும்பி, முதியவர்களிடம் துணி நெசவு, பூத்தையல் முதலியவற்றை அவர் கற்றுக் கொள்ளத் துவங்கினார்.

1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040