கைப்பேசிக்காக MP3வடிவில்
இப்போது நீங்கள் கேட்டு கொண்டிருப்பது, ஜிநொ இனத்தின் தனிச்சிறப்புடைய முரசு நடனத்தின் இசையாகும். ஜிநொ இனத்தை குறிப்பிடும் போது, அதிக சீனர்களும் அந்த இனம் பற்றி அதிகமாக அறியாமல் இருப்பது தான் உண்மை. இவ்வினம், 1979ஆம் ஆண்டு சீனாவின் 56வது இனமாக வகுக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இவ்வினத்தின் மொத்த மக்கள் தொகை 21 ஆயிரம் மட்டுமே. அவர்கள், யுன்னான் மாநிலத்தின் ஜிநொ கிராமத்தில் கூடி வாழ்கின்றனர். அவர்கள் ஆடிப் பாட விரும்புகின்றனர். அவர்கள் குழந்தை பருவம் முதல் பாரம்பரிய பாடல்களைக் கற்றுக்கொள்வதோடு முதியவர்களாகிய பின்னரும் பாடல்களை இயேற்ற முடிகிறது.
ஜிநொ முரசு நடனம், இவ்வினத்தின் நீண்டவரலாறுடைய நடனமாகும். அது ஜிநோ மக்கள் மீது அதிக செல்வாக்கு ஏற்படுத்தி வருகிறது. 2006ஆம் ஆண்டு சீனாவின் தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் அது சேர்க்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக அது மென்மேலும் அதிக மக்களால் வரவேற்கப்பட்டு வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் என்னுடன் யுன்னான் மாநிலத்தின் ஜிநொ கிராமத்துக்குச் சென்று அங்குள்ள முரசு நடனத்தைக் கண்டுரசிப்போம்.