கிராமங்களில் இளைஞர்கள் நடன அரங்கேற்றத்திறஅகு பயிற்சி செய்து வருகின்றனர். 26 வயதான ஜிநொ இன இளைஞர் யென்ச்சிங், 3 ஆண்டுகளாக நடனம் ஆடி வருகின்றனர். இத்தொழிலில் ஈடுபடுவதன் மூலம், ஜிநொ இனத்தின் பாரம்பரிய பண்பாட்டை வெளிக்கொணரலாம் என்று அவர் கூறினார்.
இது ஒரு பாரம்பரிய வழக்கமாகும். இது, ஜிநொ இன மக்களால் தலைமுறை தலைமுறையாக வெளிகொணரப்படுகிறது என்று அவர் கூறினார்.
21 வயதான இளைய பெண் லியுஷா, குழந்தை பருவம் முதல் நடனம் ஆடுவதை மிகவும் விரும்புகின்றனர். ஜிநொ முரசு நடனம் ஆடுவது, ஒரு வகை மகிழ்ச்சியாகும். அவர்களது முரசு நடனம், பல போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுள்ளது. பரிசுகளைத் தவிர, மேலதிகமானோர் ஜிநொ இனத்தையும் ஜிநொ முரசு நடனத்தையும் அறியச் செய்தது குறிப்பிடத்தக்கது. லியுஷா கூறியதாவது
முன்பு, ஜிநொ இனத்தை குறிப்பிடும் போது இரசிகர்களுக்கு அது பற்றி தெரியாது. இப்போது அதிகமானோர் ஜிநொ இனத்தை அறிந்து கவனம் செலுத்துகின்றனர். இது ஒரு நல்ல விடயமாகும் என்று அவர் கூறினார்.
ஜிநொ முரசு நடனம், ஜிநொ இனத்தை உலகிற்கு அறிவிக்கும் அடையாள அட்டை போல பங்காற்றுகிறது. நடன அரங்கேற்றத்தில் கலந்து கொள்கின்றவர்கள், வரலாறு, செவிவழிக் கதைகள், இசைக் கருவி முதலியவற்றை பெருமையுடன் வெளிப்படுத்த விரும்புகின்றனர். அவர்கள் சொந்த இனத்தின் பண்பாட்டின் பரவலைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றனர். முரசு நடனத்தின் எதிர்காலம் மீது நிறைந்த எதிர்பார்ப்பு கொள்கின்றனர்.
சரி நேயர்களே, இதுவரை சீனாவின் ஜிநொ இனத்தின் முரசு நடனம் பற்றி கேட்டீர்கள். இனிமையான ஜிநொ பாரம்பரிய பாடலோடு இன்றைய நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.