ஜிநொ இனத்தின் செவிவழிகதையின்படி, இவ்வின மக்களின் மூதாதையர் பெரிய முரசிலிருந்து தோன்றினர். எனவே, அவர்கள் பெரிய முரசுகளை புனிதமான பொருளாகக் மதிப்படுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் 2 பெரிய முரசுகள் உள்ளன. எவரும் சொந்த விருப்பத்தின்படி அதனை அடிக்கவே அல்லது நகர்த்தவே கூடாது.
சென் ஜியென்பின் என்பவர், கடந்த 7 ஆண்டுகளில் அரங்கேற்றக் குழுவுக்குத் தலைமை தாங்கி ஜிநொ இனத்தின் பாரம்பரிய முரசு நடனம் நடத்தி வருகிறார். முன்பு அவர் பெய்ஜிங், வென்சென் முதலிய மாநகரங்களில் அரங்கேற்றம் செய்தார். 1999ஆம் ஆண்டு அவர் ஊருக்குத் திரும்பி 6 திங்களில் சுமார் 10க்கு மேலான கிராமங்களுக்குச் சென்று ஜிநொ முரசு நடனத்தைக் கற்றுக் கொண்டார். பின்பு அவர் நடனம் அரங்கேற்ற துவங்கினார். அரங்கேற்றக் குழுவை உருவாக்கிய போது அவர் மேற்கொண்ட அதிக முயற்சிகள் மிக முக்கியமானது என்று சென் ஜியென்பின் நினைவுக் கூர்ந்தார்.