தற்போது முரசு நடனம் நாட்டின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அது, ஒரு வகை வெற்றியே. முன்பு நான் இந்நடனத்தைப் பரவல் செய்த போது சில முதியவர்களின் எதிர்ப்பையும் சந்தித்தேன். ஜிநொ இனத்தின் பண்பாட்டை வெளிக்கொண்ர, பரம்பரியத்தை நிலைநிறுத்தும் அதே வேளை, சில நவீன அம்சங்களையும் சேர்க்க வேண்டும். இல்லையேல், சில மதக் கொண்டாட்டத்தில் மட்டும் இந்த நடனத்தை வெளிப்படுத்தினால், ஜிநொ இன மக்களைத் தவிர இதர நடன ரசிகர்களைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்வது மிக கடினம் என்று அவர் கூறினார்.
ஜிநொ முரசு நடன அரங்கேற்றம் சில நிமிடங்கள் மட்டுமே என்ற போதிலும், நடைமுறையில் ஜிநொ மக்கள் நீண்டகாலமாக இந்த நடனமாடி வருகின்றனர்.
சந்திரநாட்காட்டியின்படி ஒவ்வோர் ஆண்டின் 2வது திங்களின் 6 முதல் 8ஆம் நாள்வரை இந்நடனம் அரங்கேற்றப்படும். இந்த 3 நாட்கள், ஜிநொ மக்களின் மிக முக்கிய விழாவான தெ மவ் கெ விழாவாகும். அப்போது இந்நடனம், வழிபாட்டின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு கிராமத்தின் மக்களும் இத்தகைய நடனத்தை ஆடுகின்றனர். ஆனால் அத்தகைய நடனம் மிக எளிதானது என்று அவர் கூறினார்.
விழாவின்போது, முரசுப் போட்டி நடைபெறுகிறது. பெரும் பேற்ற அடையாளப்படுத்தும் முரசைப் பெற அனைவரும் அதனை கையால் பிடிக்க முயல்கின்றனர்.