பாரம்பரிய ஜிநொ இனத்தின் சிறப்பை நிலைநிறுத்தும் அதேவேளை, வெளியுலகத்தின் நவீன அம்சங்களைச் சேர்ப்பது ஒரு கடினமான பிரச்சினையாகும். சென் ஜியென்ச்சுன்னின் கருத்தில், இந்நடனம், கண்டுரசிப்பதற்கு மேலும் அழகாக மாற வேண்டும். எனவே, அவர் நடன அரங்கேற்றத்தை ஏற்பாடு செய்த போது, சில புதிய அம்சங்களைச் சேர்த்தார்.
ஒரு நடன அரங்கேற்றம், அழகாகவும் குதுகலமூட்டுவதாகவும் இருக்க வேண்டும். முந்தைய பாரம்பரிய நடனம் மிக மெதுவாக இருக்கிறது. ரசிகர்கள் அதை விரும்பி பார்க்க மாட்டர். எனவே, நான் முரசு நடன அசைவுகளின் வேகத்தை அதிகரித்தேன். மேலதிக அழகான அபிநயங்கள் உள்ளன என்று அவர் கூறினார்.
முன்பு ஜிநொ இன மக்கள், பெரிய முரசுகளை பயப்படுத்தி வழிபாடு செய்தனர். இதுவரையும், அனைவரும் கிராமத்திலுள்ள பெரிய முரசை தொட கூட மாட்டார். முரசு, அடிக்கப்பட்டு ஒலிக்கின்ற போது முழு கிராமத்தில் சிறப்பான எழுச்சி உணர்வு ஏற்படும்.