எமது மேனாள் நிபுணர் ந. கடிகாசலம் அவர்கள், 2013ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 24 முதல் 31 வரை பெய்ஜிங் பயணம் மேற்கொண்டுள்ளார்.'சங்கப் பாடல்களும் சீனப் பாடல்களும்' எனும் தலைப்பில் அவர் மேற்கொண்டிருக்கும் ஆய்வு தொடர்பாக அவரது இந்தப் பயணம் அமைகிறது.செவ்வியல் மொழிகளான சீனம், தமிழ் ஆகியவற்றில் 2,500 ஆண்டுப் பழமை வளர்ந்த 'ஷி சிங்', சங்கப் பாடல்கள் ஆகியவற்றை ஒப்பீடு செய்து, இவ்விரண்டுக்கும் இடையே காணப்படும் ஒற்றுமையை இவ்வாய்வு வெளிப்படுத்த உள்ளது.கன்ஃபியூசியசு தொகுத்த 'ஷி சிங்' எனும் பாடல் தொகுதி, உலகப் புகழ்பெற்ற மிகப் பழமை வாய்ந்த சீனாவின் முதல் கவிதைத் தொகுதி என்பது அறியத்தக்கது.