• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கவர்ந்திழுக்கும் சீனா: சி அன் நகரின் தனிச்சிறப்பு மிக்க வரலாறு மற்றும் பண்பாட்டு ஈர்ப்பு ஆற்றல்
  2013-06-27 21:22:56  cri எழுத்தின் அளவு:  A A A   

அன்பான நேயர்களே, வணக்கம். இப்போது "கவர்ந்திழுக்கும் சீனா" பொது அறிவுப் போட்டி நேரம். இப்போட்டிக்கான முதலாவது கட்டுரையில் "சி அன் நகரின் தனிச்சிறப்பு மிக்க வரலாறு மற்றும் பண்பாட்டு ஈர்ப்பு ஆற்றல்" பற்றி கூறுகின்றோம். அறிவிப்பாளர் வாணி.

பண்பாட்டு மரபுச் செல்வம், மனித குல வரலாற்றை அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஆகும். இது மனித குலத்தின் வரலாற்று கதைகளையும், வளர்ச்சி குறியீடுகளையும் வெளிப்படுத்துகிறது. சி அன் நகர், சீன வரலாற்றில் 13 வம்சங்களின் தலைநகராகும். சி அன், நகராகவே, 3000க்கு மேலான ஆண்டுகள் வரலாறுடையது. சி அன் நகரம் தலைநகராக, 1100க்கு மேலான ஆண்டும் வரலாறுடையது. சீன வரலாற்றில், சி அன் நகர், மிக நீண்டக்கால பெருமையும், மிக பெரும் செல்வாக்கும் கொண்ட தலைநகரங்களில் ஒன்றாகும். சி அன் நகரில் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் செழிப்பானவை, வெவ்வேறான வகைகளைச் சேர்ந்தவை. இன்றைய நிகழ்ச்சியில், என்னுடன் சி அன் நகரில் நுழைந்து, அங்குள்ள தனிச்சிறப்பு வாய்ந்த வரலாறு மற்றும் பண்பாட்டு ஈர்ப்பு ஆற்றலை உணர்ந்து கொள்ளுங்கள்.

முதலில், இக்கட்டுரைக்கான இரண்டு வினாக்கள்.

ஒன்று, ஷென் சி மாநிலத்தின் பன் போ வரலாற்று சிதிலத்தில் தோண்டியெடுக்கப்பட்ட இசைக் கருவியின் பெயர் என்ன?

இரண்டு, ஷென் சி வரலாற்று அருங்காட்சியகத்தில் மிக அரிய செல்வம் எது?

இவ்விரு வினாக்களுக்கான விடைகள் இக்கட்டுரையில் இடம்பெறுகின்றன. எனவே கவனமாகக் கேளுங்கள்.

நீங்கள் இப்போது கேட்டுக் கொண்டிருப்பது, Xun எனும் இசை கருவியால் இசைக்கப்பட்ட இசையாகும். தொல்லியல் அறிஞர்கள் அளித்த சான்றுகளின்படி, Xun எனும் இசை கருவி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தோன்றியது. ஷென் சி மாநிலத்தின் சி அன் நகரில் உள்ள பன் போ வரலாற்று சிதிலத்தில் இது முதன்முறையாக தோண்டியெடுக்கப்பட்டது. சுமார் 7000 ஆண்டுகளுக்கு முந்தைய செழிப்பான தாய்வழி குலமரபுச் சமூகத்தின் பண்பாட்டை இந்த வரலாற்று சிதிலம் வெளிப்படுத்துகிறது.

தற்காலத்தில், Xun எனும் இசை கருவி, சீனாவின் தேசிய இசைக் குழுக்களால் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. புகழ் பெற்ற இசை கலைஞர்கள் பலர் இந்த இசை கருவி பற்றிய குறிப்புகளை எழுதியுள்ளனர். இதனால் இந்த பழமை வாய்ந்த இசைக் கருவி தற்காலத்தில் இன்னமும் புத்துயிருடன் இருக்கிறது.

சி அன் நகரில் மிக புகழ் பெற்ற வரலாற்று சிதிலம், உலகின் எட்டாவது பெரிய அற்புதமான சின் வம்சத்தின் முதல் பேரரசரின் டெரகோட்டா எனப்படும் சுடுமண் வீரர் சிலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாள்தோறும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் சின் வம்சத்தின் முதல் பேரரசரின் சுடுமண் வீரர் சிலைகளைப் பார்வையிடுகின்றனர். கி.மு. 221ஆம் ஆண்டு சின் வம்சத்தின் முதல் பேரரசர் யிங் செங் சீனாவில் பல இனங்கள் இடம்பெற்ற முதலாவது ஒன்றிணைக்கப்பட்ட நாட்டை நிறுவினார். தவிர, தனக்கு கம்பீரமான கல்லறையைக் கட்டியமைக்குமாறு அவர் மக்களைக் கோரினார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040