• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கவர்ந்திழுக்கும் சீனா: சி ஆன் சுற்றுலா நகரம்
  2013-06-27 21:22:52  cri எழுத்தின் அளவு:  A A A   

நேயர்களே, வணக்கம். இன்றைய சுவை மிக்க சீனா எனும் சிறப்பு நிகழ்ச்சியில் சந்திப்பதி ல் மகிழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சியில் சீனாவின் சி ஆன் நகரம் பற்றிய தகவலை வழங்குகின்றோம். நான் சரஸ்வதி

முதலில், இன்றைய சிறப்பு நிகழ்ச்சிக்கான இரண்டு கேள்விகளை கேளுங்கள்.

கேள்வி 1. சி ஆன் நகரம், சீனாவின் வரலாற்றில் எத்தனை வம்சங்களின் தலைநகராக திகழ்ந்தது.

2.பெய்ஜிங் மாநகரிலிருந்து சி ஆன் நகரத்திற்குச் செல்ல, அதி விரைவு தொடர்வண்டி மூலம் எத்தனை மணிநேரம் தேவை?

சி ஆன் நகரம், மேற்கு சீனாவில் அமைந்துள்ளது. 3100 ஆண்டு வரலாறுடைய இந்நகரம், சீனாவின் பண்டைகாலத்தில் 13 வம்சங்களின் தலைநகராக திகழ்ந்தது. பழங்காலத்தில், பழைய பட்டுத்துணிப் பாதையின் துவக்கப் புள்ளியாக இந்நகரம் கருதப்பட்டது. இன்றைய நிகழ்ச்சியில், இந்நகரத்திற்குச் சென்று, அங்குள்ள பாரம்பரிய நடையுடை பாவனைகளையும் நவீனமயமாக்க வளர்ச்சியையும் அனுபவிக்கலாம். வாருங்கள்.

சி ஆன் நகரம், சீனாவில் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா நகரங்களில் ஒன்றாகும். இங்குள்ள 600க்கும் மேற்பட்ட, முக்கிய அரிய வரலாற்று இடங்கள் காணப்படுகின்றன. இதன் விளைவாக, சி ஆன் நகரம், இயற்கை வரலாற்று அருங்காட்சியகமாக புகழ் பெற்றுள்ளது. சி ஆன் நகரத்திலிருந்து சில பத்து கிலோ மீட்டர் தூரத்தில், சின் வம்சத்தின் முதல் பேரரசரின் கடுமட்பாண்டபோர் வீரர் உருவச் சிலைகள் இருக்கின்றன. இச்சிலைகள், உலகின் 8வது அற்புதமாக பாராட்டப்படுகின்றன. இவைகள், உலகில் வரலாற்றுப் பண்பாட்டு மரபு செல்வப் பெயர்ப் பட்டியலில் சேர்ந்த முதலாவது சீன மரபுச் செல்வமாகும். இந்நகரில் ஈர்ப்பு மிகுந்த மனித குல வரலாற்றுச் செல்வங்கள் மிகுந்துள்ளன. தவிர, நவீனமயமாக்க வளர்ச்சி, மக்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளது. உடை, உணவு, உறைவிடம், போக்குவரத்து, சேவை முதலியவை இதில் இடம்பெறுகின்றன. அதே வேளை, வட மேற்கு சீனாவில் முதலாவது சுரங்க இருப்பு பாதை, இந்நகரில் கட்டியமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 10 ஆயிரம் வாடகை சீருந்துகள், நாள்தோறும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு சொகுசான, நட்பார்ந்த சேவை வழங்கி வருகின்றன. இங்கு வந்து, எங்கும் போக விரும்பினாலும், உரிய நேரத்தில் தொடர்புடைய சேவையைப் பயணிகள் அனுபவிக்கலாம்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040