• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கவர்ந்திழுக்கும் சீனா: சி ஆன் சுற்றுலா நகரம்
  2013-06-27 21:22:52  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த சில ஆண்டுகளில், சி ஆன் நகரத்தின் சுற்றுலா துறை வெகுவாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக, பல்வேறு நகரங்களுக்கிடையில் அதிவிரைவு தொடர் வண்டி போக்குவரத்தில் சேர்ந்த பிறகு, பெய்ஜிங், வூகான், குவாங்சொ, ஷாங்காய் போன்ற மாநகரங்களிலிருந்து இங்கு வருவது மிகவும் வசதியாக உள்ளது. எடுத்துக்காட்டாக, பெய்ஜிங் மாநகரிலிருந்து சி ஆன் நகருக்கு வருவதற்கு 4 மணி நேரம் போதும். விரைவானது. அண்மையில் வெளியிடப்பட்ட தொடர்புடைய புள்ளிவிபரங்களின்படி, 2012ஆம் ஆண்டில், பத்து லட்சக்கு மேலான பயணிகள் இந்நகரில் பயணம் மேற்கொண்டனர். இந்நகரில் வட மேற்கு சுற்றுலா பயண நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் செய்தியாளருக்கு அறிமுகப்படுத்தியதாவது

நாள்தோறும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை உபசரிக்கின்றேன். இதில், பிரிட்டன், அமெரிக்கா, ஹாங்காங் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களிலிருந்து வரும் பயணிகள், ஆர்வத்தோடு, இங்கு சுற்று பயணம் மேற்கொள்கின்றனர். சேவை புரியும் போது, சீன மொழி மற்றும் ஆங்கில மொழியை நான் பேசுகின்றேன். இதன் மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்கும் போது வசதியாக இருக்கிறது. ஒருவருடன் ஒருவர் தொடர்புகொண்டு புரிந்துகொள்வதற்கு இது மாபெரும் உதவியாகவும் இருக்கிறது என்று அவர் பெருமையுடன் கூறினார்.

சுற்றுலா துறையின் வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்துவதுடன், சி ஆன் நகரம், வரலாற்று பண்பாட்டு மரபுச் செல்வங்களைச் சீராகப் பாதுகாத்து வருகிறது. அத்துடன், இங்குள்ள பொது மக்களின் வாழ்க்கையுடன் இப்பாதுகாப்புத் திட்டப்பணி நெருக்கமாக இணைந்து வருகிறது. எடுத்துக்காட்டாக, சீனாவின் தாங் வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்ட சுவர் இந்நகரில் உள்ளது. இச்சுவரின் நீளம் 3.7 கிலோமீட்டராகும். 1300 ஆண்டுகால வரலாறுடைய இச்சுவரை நன்றாக பாதுகாக்கும் வகையில், 50 கோடி யுவானை சி ஆன் அரசு ஒதுக்கிவைத்துள்ளது. சுவர் தோற்றம் மறுசீரமைக்கப்பட்டு, அதைச் சுற்றியுள்ள செயற்கை ஆறு உருவாக்கப்பட்டுள்ளது. அதே வேளை, தாங் வம்சக்காலத்தின் செழுமை இதன் மூலம் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதை கண்டு இன்றைய சி ஆன் நகரத்தின் முன்னேற்றம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளால் எளிதாக புரிந்துகொள்ளப்படுகிறது. இச்சுவரின் மேற்பக்கத்தில் 4 இலட்சத்து 40 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பான தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்நகரத்தின் இயற்கைச் சூழல் சீராக மேம்படுத்தப்பட்டுள்ளது. தவிர, இத்தோட்டத்தில், பொழுதுபோக்கு, உடல் பயிற்சி போன்ற நடவடிக்கைகளில் பொது மக்கள் ஈடுபடுகின்றனர். இந்நகரத்தின் தொல் பொருட்களைப் பாதுகாப்பதுடன், பொது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு உத்தரவாதமும் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொல் பொருட்களை தவிர, சி ஆன் நகரத்தில் தனிச்சிறப்பு வாய்ந்த சிற்றுண்டிகளை சுவைபார்ப்பதன் மூலம், சீனாவை மேலும் நன்றாகப் புரிந்துகொள்ளலாம். இங்குள்ள சுவையான உணவுப் பொருட்கள், உலகத்துடன் இணைந்து, தொடர்புகொள்ளும் பாலமாகக் கருதப்படுகிறன. உணவுப் பொருட்கள் மிகுந்த ஈர்ப்பு ஆற்றல் பெற்றுள்ளது. ஒவ்வொரு இடத்தின் சிற்றுண்டிகளைச் சாப்பிடுவதன் மூலம், அங்குள்ள பண்பாட்டை புரிந்துகொள்வதற்குத் துணை புரிகிறது. எனவே, உணவுப் பொருட்கள், சில சமயம், குறிப்பிட்ட பண்பாட்டை அறிந்துகொள்ளும் ஒரு திறவுகோலாக விளங்குகிறது என்று வெனிசுலாவிலிருந்து வந்திருக்கும் சி ஆன் பல்கலைக்கழகத்தில் பயில்கின்ற மாணவர் ஆன்டனி மொலினா தெரிவித்தார். அவர் கூறியதாவது

சி ஆன் நகரம், பண்டைகாலத்தில், சீனா மற்றும் உலகின் மைய நகரங்களில் ஒன்றாகும். தற்போது, இங்கு பல்வகை சிற்றுண்டிகள் இருக்கின்றன. பல்வேறு சிற்றுண்டிகளை நான் அடிக்கடி சாப்பிடுகின்றேன். மிகவும் சுவையாக இருக்கின்றன. இங்குள்ள சிற்றுண்டிகள், அதிகமான மக்களை ஈர்க்கின்றன. வாய்ப்பு இருந்தால், இந்நகரத்தில் மீண்டும் சுற்று பயணம் மேற்கொள்ள விரும்புகின்றேன். இங்குள்ள உணவுப் பொருட்கள் மற்றும் இனிமையான காட்சி இடங்கள் எனது மனதில் ஆழப்பதிந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

அன்புள்ள நேயர்களே, வாய்ப்பு இருந்தால், நீங்களும் சி ஆன் நகரத்திற்கு வந்து சுவையான உணவுப் பொருட்களைச் சாப்பிட்டு, இங்குள்ள நீண்டகால வரலாறுடைய எழில் மிக்க காட்சி மண்டலங்களில் இன்பப் பயணம் மேற்கொள்ளலாம். உங்களை நாங்கள் மனமுவந்து வரவேற்கின்றோம்.

இனி, இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டு கேள்விகளை மீண்டும் கேளுங்கள்.

1. இந்நகரம், சீனாவின் வரலாற்றில் எத்தனை வம்சங்களின் தலைநகராக திகழ்ந்தது.

2.பெய்ஜிங் மாநகரிலிருந்து சி ஆன் நகரத்திற்குச் செல்ல, அதிவிரைவு தொடர்வண்டி மூலம் எத்தனை மணிநேரம் தேவை?


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040