• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கவர்ந்திழுக்கும் சீனா: ஹுவாங்ஷான் மலை
  2013-06-27 21:22:49  cri எழுத்தின் அளவு:  A A A   

வணக்கம், நேயர் நண்பர்களே. கவர்ந்திழுக்கும் சீனா என்னும் பொது அறிவு போட்டி இன்று தொடர்கிறது.

சீனாவில் மிகவும் புகழ்பெற்ற மலைகள், ஏரிகள், ஆறுகள் ஆகிய இயற்கை அற்புதங்கள் அதிகமாகவே உள்ளன. அழகான இயற்கைக் காட்சிகள் கண்டுகளித்து ரசிக்கப்படும் அதேவேளையில், தளிச்சிறப்பு உடைய பண்பாட்டு வளங்களும் உருவாகியுள்ளன.

இன்றைய சிறப்பு நிகழ்ச்சியில் நீங்கள் எங்களோடு சீனாவின் புகழ்பெற்ற ஹுவாங் ஷான் மலைக்கு வாருங்கள். அதன் மூலமாக சீனாவில் பண்டைய மற்றும் நீண்டகால வரலாறு உடைய மலையையும் நீர்ப் பண்பாட்டையும் உணர்ந்து கொள்ளுங்கள்...

நிகழ்ச்சி துவங்கும் முன்பு, ஹுவாங்ஷான் மலை பற்றிய இரண்டு வினாக்களை நேயர்களுக்கு வழங்குகின்றோம்.

ஒன்று, ஹுவாங்ஷான் சுற்றுலா தலத்துக்கு கிடைத்துள்ள உலக நிலை பெருமைகள் எத்தனை?

இரண்டு, ஹுவாங்ஷான் சுற்றுலா தலத்திலுள்ள அற்புதமான காட்சிகள் எத்தனை?

சரி, இப்போது ஹுவாங்ஷான் மலையில் எங்களுடன் சேர்ந்து உலா வாருங்கள்...

ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் இருந்து வந்த கிரிஸ்டீனா அம்மையார் சீனாவின் ஹாங்காங் பலமுறை சென்றுள்ளார். ஆனால், அவர் சீனப் பெருநிலப் பகுதியை வந்தடைவது இது முதல்முறை. சீனாவில் சுற்றுலா மேற்கொண்ட போது, ஹுவாங்ஷான் மலை அவரை மிகவும் கவர்ந்தது. அதுப் பற்றி அவர் கூறியதாவது

ஹுவாங்ஷான் மலையில் நடந்து செல்லும் போது அழகான காட்சிகளை கண்டுகளித்து இரசிக்கலாம். சீனாவின் மலைகளையும் ஆறுகளையும் கண்டுகளிக்கும் பயணிகளுக்கு, ஹுவாங்ஷான் சிறந்த தேர்வு என்று அவர் எண்ணுகிறார்.

ஹுவாங்ஷான் மலை, சீனாவின் மத்திய பகுதியிலுள்ள ஆன்ஹுய் மாநிலத்தின் ஹுவாங்ஷான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சீன லரலாற்றில் மிங் வம்சக் காலத்தில் புகழ்பெற்ற பயணியும் நிலவியல் ஆய்வாளருமான சுயே சியகெ இரு முறை இம்மலையில் பயணம் மேற்கொண்டார். அங்கே அற்புதமான காட்சிகளை கண்டுகளித்த அவர்,

ஹுவாங்ஷான் மலையில் பயணம் மேற்கொண்டால் வேறு மலைகளில் உலா செல்ல வேண்டியதில்லை என்று தொகுத்துக் கூறினார். அதற்கு பின், இம்மலை, சீனாவில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று என்ற பெருமையை வகித்து வருகிறது.

ஹுவாங்ஷான், சீனாவிலுள்ள பத்து பெரிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1990ஆம் ஆண்டு, இதற்கு, உலக பண்பாட்டு மற்றும் இயற்கை மரபுச் செல்வம் என்ற பெருமை கிடைத்தது. 2004ஆம் ஆண்டு உலக நிலவியல் பூங்காவில் முதல் தொகுதியாக அது சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகப் பண்பாட்டு மரபுச் செல்வம், உலக இயற்கை மரபுச் செல்வம், உலக நிலவியல் பூங்கா ஆகிய மூன்று உலக நிலை பெருமைகளைக் கொண்ட ஹுவாங்ஷான், சீனா மற்றும் உலளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த பெருமைகளை அறிந்த , மும்பை மாநகரைச் சேர்ந்த திரு.தாரியுஸ் ஷ்ரோஃப் ஹுவாங்ஷான் மலைக்கு வருகை தந்தார். இம்மலை பற்றி அவர் செய்தியாளரிடம் பேசியபோது

இணையதளத்தில் ஹுவாங்ஷான் மலை பற்றிய விபரங்கள் அதிகமாக கிடைக்கிறது. சீன சுற்றுலா பற்றிய கையேட்டை திறந்து படிக்கும் போது, மேகம் கூடியிருக்கும் மலைக் காட்சியை கண்டவுடன் சீனாவின் ஹுவாங்ஷான் மலை அல்லது லிஜியாங் ஆறு பற்றிய எண்ணம் எழுகிறது என்றார் அவர்.

தாரியுஸ் ஷ்ரோஃப் தெரிவித்த மேகம் கூடியிருக்கும் மலைக் காட்சி மேகக் கடல் என அழைக்கப்படுகிறது. மேகக் கடல், ஹுவாங்ஷான் மலையில் உள்ள அற்புதமான காட்சிகளில் ஒன்று மட்டுமே.

தேவதாரு மரம், வியப்பான கல், மேக கடல், வெந்நீர் ஊற்று, குளிர்காலப் பனி ஆகிய ஐந்து வகையான அற்புதக் காட்சிகளால் ஹுவாங்ஷான் மலை மிகவும் புகழ்பெற்றது. இது பற்றி நேயர்களே உங்களுக்கு தெரியுமா?

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040