• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கவர்ந்திழுக்கும் சீனா: ஹுவாங்ஷான் மலை
  2013-06-27 21:22:49  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்த ஐந்து அற்புதக் காட்சிகளும், சீனாவிலுள்ள மலைகளின் பல்வகைத் தனிச்சிறப்புகளில் ஒன்றாக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலிருந்து சீனாவில் முதல்முறை சுற்றுலா மேற்கொண்ட சாட் பாத்தீ, ஹுவாங்ஷான் சுற்றுலா தலத்தை வந்து பார்க்க வேண்டுமென பரிந்துரை செய்துள்ளார். அவர் கூறியதாவது

ஹுவாங்ஷான் மலை மிகவும் அழகாக உள்ளது. இயற்கைக் காட்சிகளின் சிறந்த கண்காட்சி போல இது உள்ளது. அமைதியான சூழ்நிலை நிறைந்திருக்கிறது. அனைவரும் இங்கே வருகை தந்து வேறுபட்ட காட்சிகளை கண்டுகளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

கவர்ந்திழுக்கும் ஹுவாங்ஷான் மலையில் மேற்கூறிய ஐந்து அற்புதக் காட்சிகளைத் தவிர, அதன் சூழலும் சிறப்பாக உள்ளது. ஓராண்டின் 4 காலாண்டுகளிலும் அதன் காட்சிகள் வேறுப்பட்டவை. மலையின் கீழப் பகுதிலும் மேல் பகுதிலும் காட்சிகள் வேறுப்பட்டவையாக இருக்கும். குறிப்பாக, காலையிலும் மாலையிலும் அல்லது வெயிலிலும் மழையிலும் சிறப்பான சூழல்கள் நிலவுகின்றன. எனவே, பயணிகளின் மனத்தில் வேறுப்பட்ட இதமான உணர்வுகள் ஏற்படுகின்றன. இந்த சிறந்த உணர்வு, சீனாவின் செஜியாங் மாநிலத்தைச் சேர்ந்த பயணி சு மிங்லீ அம்மையாரை மிகவும் கவர்ந்தது. அவர் மேலும் கூறியதாவது

வெயில் அடிக்கும் போதும் மழை பெய்யும் போதும் நாம் பார்க்கும் இந்த சூழல் மிகவும் வேறுப்பட்டவை. ஓங்கி வளர்ந்திருக்கும் தேவதாரு மரங்களுடன் விந்தையுலகமாக இருப்பதை உணர்வதாக அவர் தெரிவித்தார்.

ஹுவாங்ஷான் மலையில் அதிக காட்சித்தலங்கள் உள்ளன. ஒவ்வொரு பயணியின் பார்வையிலும் வேறுபட்ட காட்சிகள் தென்படுகின்றன. இம்மலையில் தங்களுக்கு மிகவும் பிடிக்கும் காட்சியைக் கண்டுமகிழ்வது, இந்த மலையில் மேற்கொள்ளும் சுற்றுலா ஒரு பகுதியாகும்.

பன்னாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகள், ஹுவாங்ஷான் மலையிலேயே அவர்களுக்கு மிகவும் விருப்பமான காட்சிகளை கண்டுமகிழ்வர் என்று நம்புகின்றோம். இந்த மலையை தவிர, பயணிகளை கவரும் பல்வகை சுற்றுலா தலங்களும் ஹுவாங் ஷான் மாவட்டத்தில் அமைந்துள்ளன. பிரான்ஸின் பாரிஸ் மாநகரைச் சேர்ந்த ஜீன்-மார்க்-மார்டீன் கூறியதவாது

இங்கே நவீனமும் பாரம்பரியமும் சிறந்த முறையில் ஒன்றிணைந்திருப்பதை உணர்ந்து, இன்ப அதிர்ச்சி அடைக்கின்றோம். வழக்கமாக சுற்றுலாவின் போது சீனாவின் கிராமம், இயற்கைக் காட்சிகள், கட்டிட்டக்கலை ஆகியவற்றை மட்டுமே கண்டுகளிக்கலாம். ஆனால், எங்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி, மேலதிக விடயங்கள் கண்களைக் கவர்ந்துள்ளன. நாடு திரும்பிய பின், இங்கு வருகை தருமாறு நண்பர்களை ஊக்குவிப்பேன். இங்கு வரும் பயணிகள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள். பாரம்பரிய மற்றும் பண்டைய சீனாவை அவர்கள் கண்டுமகிழ்ந்துள்ளதாக, ஜீன்-மார்க்-மார்டீன் தெரிவித்தார்.

இந்த பிரான்ஸ் நண்பர் சொல்வது போல, ஹுவாங்ஷான் மலையின் இயற்கைக் காட்சிகளும் பண்பாடும் பயணியரை என்றுமே ஏமாற்றம் அடைய செய்யாது. உலக நாடுகளின் நேயர் நண்பர்களே, ஹுவாங்ஷானுக்கு நீங்கள் வருகை தந்து பயணம் மேற்கொள்ளும் நாட்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

நேயர்களே. கடைசியில் ஹுவாங் மலை பற்றிய இரண்டு வினாக்களை மீண்டும் உங்களுக்கு வாசிக்கின்றோம்.

ஒன்று, ஹுவாங்ஷான் சுற்றுலா தலத்துக்கு கிடைத்துள்ள உலக நிலை பெருமைகள் எத்தனை?

இரண்டு, ஹுவாங்ஷான் சுற்றுலா தலத்திலுள்ள அற்புதமான காட்சிகள் எத்தனை?


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040