அனைவருக்கும் வணக்கம். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் பொன்விழாவின் அருமையான நேரத்தில், நான் தமிழ் பிரிவின் இளைஞர் பணியாளர்களின் சார்பில் உரை நிகழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். எனது பெயர் ஈஸ்வரி. இன்று நான் உங்களுடன் தமிழ் பிரிவின் பல்லூடக வளர்ச்சிச் சாதனைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
6 ஆண்டுகளுக்கு முன், நான் சீன வானொலி தமிழ் பிரிவில் சேந்தேன். இந்த 6 ஆண்டுகாலம், தமிழ் பிரிவு மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்ற காலமாகும். தமிழ் பிரிவின் இளைஞர்கள், நேரில் அவ்வளர்ச்சியைப் பார்த்து, அதில் பங்கு கொண்டு, தமிழ் பிரிவின் வளர்ச்சியுடன் முன்னேறி வருகிறோம்.
தற்போது உலகில் சீனாவின் செல்வாக்கு பெரிதாகி வருகிறது என்பதில் ஐயமில்லை. மென்மேலும் அதிகமானோர் உண்மையான பன்முகமான சீனாவை அறிய விரும்புகின்றனர். சீன வானொலி தமிழ் பிரிவு, அவர்களின் தேவையை நிறைவு செய்து பல்லூடகம் வழியாக சீனாவை அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
2003ஆம் ஆண்டில், சீன வானொலி தமிழ் இணையதளம் துவங்கியது. 2013ஆம் ஆண்டில், இணையதளத்தின் கைப்பேசி வடிவம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. இந்த 10 ஆண்டுகாலத்தில் சீன தகவல் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியைப் பயன்படுத்தி, தமிழ் பிரிவு, பல்லூடகத்தின் வகைகளை புதுப்பித்து வளர்த்து வருகிறது.
இதுவரை, தமிழ் பிரிவின் இணையத்தளம் 3 முறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மென்மேலும் அதிகாமான செய்தி வினியோகம், மென்மேலும் அழகான வடிவமைப்பு, பயனுள்ள தகவல்கள், இவையெல்லாம், அதிகமாகப் பயன்படுத்துவோர்களை ஈர்த்துள்ளன. விகடன் இதழ் உள்ளிட இந்திய புகழ் பெற்ற செய்தி ஊடகங்கள் புதிய இணையத்தள வடிவமைப்பை வெகுவாக பாராட்டி இருக்கிறது. தமிழ் பிரிவின் இணையத்தளத்தைச் சொடுக்கும் எண்ணிக்கை, பயன்படுத்துவோர் முதலியவை சீன வானொலி நிலையத்தில் முன்னணியில் உள்ளது.
தவிரவும், தெற்காசியாவில் 4வது தலைமுறை இணையத்தளத்தின் பரவலுடன், நாங்கள் கைபேசி இணையத்தளத்தைத் துவக்க இருக்கிறோம். நேயர்கள் கைபேசி மூலம் எப்போதும் எங்கும் முக்கிய செய்திகளை வசதியாக அறியலாம்.
பண்பலை நிகழ்ச்சி, பாரம்பரிய சிற்றலை நிகழ்ச்சிகளை விட வேகமாகவும் தெளிவாகவும் ஒலிபரப்பாகிறது. 2010ஆம் ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்பில் பண்பலை நிகழ்ச்சியைத் துவங்கினோம். "சீன வானொலி இலங்கை பண்பலை 97.9. " நாள்தோறும் பகல் நேரத்தில் நான் இலங்கை நேயர்களுக்கு செய்தியறிக்கை வழங்குகிறேன். இவ்வாண்டு மே திங்கள் முதல் இந்தியாவின் சில பல்கலைக்கழகத்திலும் குடியிருப்பு பிரதேசத்திலும் எங்களது ஒலிபரப்பைக் கேட்கலாம். தமிழ் பிரிவின் ஒலிபரப்பினால், நேயர்களுடனான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. "உலகத்தைப் பற்றி, உங்கள் செவியின் பக்கத்தில் அறியலாம்" என்ற கண்ணோட்டம், நடைமுறையாகியுள்ளது. தமிழ் மொழி நீண்ட வரலாறுடைய செம்மொழி. ஆனால், சீனாவில் தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சியும் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுக்கும் புத்தகங்களும் மிக குறைவு. சீன வானொலி முதன்மை அறிவிப்பாளர் திருமதி தி கலையரசி மொழி பெயர்த்து தொகுத்த சீன-தமிழ் அகராதி, தமிழ் பிரிவின் தலைவர் திருமதி கலைமகள் முதலியோர் மொழிபெயர்த்த சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி ஆகியவை, இத்துறையில் சீனாவின் வெற்று இடங்களை நிரப்பியுள்ளன.