வெளிநாடுகளில் செல்வாக்கு அதிகரிப்பதோடு, மேலதிக சீனர்கள் சீன வானொலி தமிழ் பிரிவையும் சீன-இந்திய நட்புறவையும் அறிய, தமிழ் பிரிவு உள்நாட்டில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாண்டு எடுத்துக்காட்டாக, சீனாவில் இந்திய உணவு விழா, இந்திய வாரம் எனும் சீன மொழி வானொலி நிகழ்ச்சிகள், நடன வகுப்பு, முதலாவது சீன-தெற்காசிய பொருட்காட்சிக்கான தலைப்புப் பாடல் திரட்டல் போன்ற நடவடிக்கைகளில் சிலவற்றைத் தமிழ் பிரிவு நடத்தியது, சிலவற்றில் பங்கெடுத்துக் கொண்டது. இங்கு எங்களுக்கு ஆதரவளிக்கும் இந்திய தூதரகத்துக்கும் எங்களுக்கு உதவியளித்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். வானொலி அலுவல்களைத் தவிரமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், தமிழ் பிரிவின் இளைஞர்கள் அதிகமாக கற்றுக் கொண்டு வேலையில் மேலதிக ஆற்றலை வெளிப்படுத்தலாம்.
முந்தைய சாதனை, தற்போதைய முயற்சி, இவையெல்லாம், ஒரு நல்ல எதிர்காலத்துக்கு அடிப்படையிடுகின்றன. 、
எதிர்காலத்தில் பல்லூடக அலுவலில், கைபேசிக்கான மேலதிக பயன்பாட்டு சேவை வகைகளை வளர்க்கத் திட்டமிட்டுள்ளோம். மின்னணு இதழ்களை அச்சடித்து, சீன இலக்கிய படைப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து இணையத்தளம் மூலம் வெளிநாடுகளுக்குப் பரவல் செய்ய உள்ளோம். தவிர, உள்ளூர் தனிச்சிறப்புடைய செய்தி ஊடக சேவைகளையும் வழங்க இருக்கிறோம். வெளிநாடுகளிலுள்ள சீன வானொலி தமிழ்ப் பிரிவின் கிளை அலுவலகம், கன்ஃப்யுசியெஸ் கழகம், தமிழொலி இதழுக்கான வெளிநாட்டு வெளியீட்டகம் உள்ளிட்ட பல கிளை நிறுவனங்களை தமிழ்ப் பிரிவு நிறுவ திட்டமிட்டுள்ளது.
50 வயது, ஒரு மனிதரை பொறுத்தவரை, சாதனை பெற்ற வயதாகும். ஆனால், 50 வயதான தமிழ் பிரிவு, ஓர் இளைஞர் போல, உயியாற்றலை வெளிப்படுத்தி மேலதிக வளர்ச்சியை எதிர்நோக்கி இருக்கிறது.
பல்லூடக சேவையை வளர்த்து, பல்வகை ஊடக வடிவங்களை உருவாக்கி, சர்வதேச, நவீன, முன்னணியிலுள்ள சீன வானொலி நிலையத்தை உருவாக்குவது, எங்களது மாபெரும் இலக்காகும். அதன் வழியில், இளைய தமிழ் பிரிவு, மேலதிக பெருமை மிக்க சாதனைகளை பெற முயற்சி மேற்கொள்ளும்.