டாக்டர் சன்யாட் சென் நினைவாலயம்.
இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் ஒரு முக்கிய தலைவராக கருதப்பட்டவர். இவரது மூன்று முக்கிய கொள்கைகள். தேசியவாதம், குடியரசு, மக்களின் வாழ்வாதாரம் . ஆப்ரகாம் லிங்கனின் கருத்துக்கள் இவரை ரொம்ப கவர்ந்தது. இவர் ஹாங்காங்கில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் சில இளைஞர்களில் இவரும் ஒருவர். மருத்துவராக பணிபுரிந்தாலும் பொதுவாழ்வில் மிகவும் ஆர்வம் இருந்தது. இவருக்காக கட்டப்பட்ட இந்த நினைவாலயம் 1929 ஆண்டு கட்டப்பட்டது. இயற்கையான நீலமலையில் சுற்றிய இடங்களில் எல்லாம் பச்சை பசேலென்ற இயற்க்கை காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. நீல மலை, மிங் கல்லறை எல்லாம் ஒரே இடத்தில் இருப்பதால் எல்லா மக்களும் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.