• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி
  2014-11-26 09:09:05  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் இருவருக்கும் இவ்வாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்று நோபல் பரிசு குழுயின் தலைவர் யாக்ரேன் ஓஸ்ரோவில் அறிவித்தார். தற்போது உலகில் வறிய நாடுகளில் 60 விழுக்காட்டு மக்கள் 25 வயதுக்குள்ளானவர்களாவர். நிதி அருஞ்செயலுக்குப் பதிலாக அவர்களுக்குப் பள்ளிக் கல்வியை வழங்குவதன் மூலம் உலக அமைதிக்கு மாபெரும் பங்கு ஆற்ற முடியும் என்று அவர் கூறினார்.

கைலாஷ் சத்யார்த்தி, 1954ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 11ஆம் நாள் இந்தியாவிலுள்ள மத்திய பிரதேசத்தில் பிறந்தார். குழந்தைத் தொழிலாளிகள் அதிகமாக காணப்பட்ட இந்தியாவில், மகாத்மா காந்தியின் வன்முறையற்ற ஒத்துழைப்பாத எழுச்சியை அவர் பின்பற்றி, குழந்தைகளின் மீதான உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான பெருமளவு ஆர்ப்பாட்டம் நடத்தினார். கடந்த பல ஆண்டுகளாக, குழந்தை உரிமை மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் அவர் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றினார்.

1980ஆம் ஆண்டு குழந்தைகளைப் பாதுகாக்கும் இயக்கம் ஒன்றை அவர் ஆரம்பித்தார். இந்தியாவில் பல பதனீட்டு ஆலைகளில் குழந்தை தொழிலாளாகள் உள்ளனர். குடும்பத்தினர் வாங்கிய கடனுக்காக, அவர்கள் ஆலையில் கடும் பணியில் ஈடுபட்டு அல்லல்படுகின்றனர். வருமானம் மிகமிகக் குறைவானது. மட்டுமல்லாமல் மீண்டும் கடன் பெறுவதற்காக அவர்களை மீண்டும் விற்பனை செய்வது அதிகமாக்க் காணப்படுகின்றது.

21ஆவது நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளில், உலகளவில் குழந்தை தொழிலாளி நிலைமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினை சத்யார்த்தி ஏற்பாடு செய்து நடத்தினார். உலகில் கடும் உழைப்புச் சுரண்டலால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான குழந்தைத் தொழிலாளிகளைக்காபாற்றுவதில் அவர் ஈடுபட்டு வருகின்றார். குழந்தை தொழிலாளிகளை நியமிப்பது சட்டத்துக்குப் புறம்பானது. அறநெறிக்குப்புறம்பானது என்று தனது இணையத்தில் சத்யார்த்தி குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைத் தொழிலாளி நிலைமையை முற்றிலும் ஒழிக்காமல், கல்வி பெறுவதற்கான அவர்களது உரிமையைப் பாதுகாக்க முடியாது. குழந்தைத் தொழிலாளி, கல்வி உரிமை இழப்பு ஆகியவை தொடரவல்ல பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழிற்துறை வளர்ச்சிப் பாதையில் சந்திக்கும் மிக பெரிய தடையாகும் என்பதை அனைத்துலகமும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவரது முயற்சியில், ஆயிரக்கணக்கான குழந்தைத் தொழிலாளிகள் கடும் உழைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, குடும்பங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

அக்டோபர் 10ஆம் நாள் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றதாக சத்யார்த்தி அறிந்து கொண்டார். தொலைபேசி மூலம், நோபல் பரிசு பற்றிய அதிகாரப்பூர்வ இணையத்துக்கு அவர் பேட்டியளித்தார். நோபல் பரிசு என்ற புகழ் மூலம் உழைப்புச் சுரண்டலால் அல்லல்படும் குழந்தைகளுக்கு உதவியளிக்க மேலதிக மக்களை அணித்திரட்ட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். அதேவேளையில், பல்வேறு நாடுகளின் அரசுகளும் பொது நல அமைப்புகளும் ஒத்துழைத்து இந்நடவடிக்கையில் பங்கெடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040