• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் யோகா பயிற்சி வகுப்பு
  2014-11-26 09:10:19  cri எழுத்தின் அளவு:  A A A   

சியாவ்லின்ச்சியாங் என்பவர் முன்பு ஒரு பெரிய கூட்டு நிறுவனத்தின் உயர் நிலை பொறுப்பாளர். 15 ஆண்டுகளுக்கு முன், நான் பல பத்து இலட்சம் யுவான் கொண்டுள்ளேன். தாவ்பாவ் நிறுனத்தின் தலைமை இயக்குநர் மா யூன்னை விட மேலும் பணக்காரர் என்று அப்போதைய நிலைமை பற்றி கூறிய போது அவர் குறிப்பிட்டார். ஆனால் தனது கூட்டு நிறுவனம் சரியாக இயங்காத்தால், திவால் அடைந்தது. மீண்டும் அடிமட்ட பதவியிலிருந்து அவர் பணி புரிய வேண்டியுள்ளார். வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் மாற்றம் அவரைப் பாதித்துள்ளது. அவர் எளிதாக கோபம் அடைந்தார். கலக்க மனநிலையும் தோன்றியுள்ளது.

2002ஆம் ஆண்டு அவர் சாலை விபத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து 3 நாட்கள் உணர்ச்சியற்ற நிலையில் இருந்தார். பிறகு, நணபர் ஒருவரின் முன்மொழிவில் அவர் யோகா உடற்பயிற்சி செய்தார். அந்நேரத்தில் அவர் யோகா பற்றிய பல புத்தகங்களை படித்தார். முற்றிலும் குணம் அடைந்த பிறகு, இந்தியாவுக்குச் சென்று உண்மையான யோகாவைத் தேடிப்பார்க்க அவர் புறப்பட்டார்.

யோகா சுமார் 5000 ஆண்டு வரலாறுடையது. இந்திய புதுதில்லிக்கு 250 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ரிஷ்கேஷ் யோகா ஆரம்பித்த இடமாகக் கருதப்படுகிறது. 50 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த சிறிய நகரத்தில் பெரியதோ சிறியதோ 100க்கு மேற்பட்ட யோகா பயிற்சி பள்ளிகள் உள்ளன. ஒரு சில பள்ளிகளில் ஒரே அறையும் ஒரே ஆசிரியரும் மட்டும் இருக்கின்றனர்.

மிகவும் பாரம்பரிய யோகா வகுப்புகள் கோயில்களில் உள்ளன. கல்வி கட்டணம் குறைவு. உள்ளூர் மக்களுக்கு இலவசமாக வழக்கப்படுகின்றன. புள்ளிவிபரங்களின் படி, முழு உலகிலும் சான்றிதழ் பெற்ற யோகா ஆசிரியர்களில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர் ரிஷ்கேஷில் பயிற்சி பெற்றிருந்தனர்.

ரிஷ்கேஷ் நகரை உலக புகழ்பெற்ற செய்த்து பிரிட்டனின் பீடுல்ஸ் இசை குழுவாகும். 1968ஆம் ஆண்டு பிப்ரவரி, போதைப் பொருள் பயன்பாட்டினால் இவ்விசை குழு வளர்ச்சிப் பாதையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜான் லேனும் அவரது குழுவினரும் இந்து ஆன்மீக தலைவர் மகாலேஸ் மகாஸுடன் ரிஷ்கேஷ் நகரில் தியானம் பயிற்சி கற்றுக்கொண்டனர். குறுகிய 2 திங்களில் அவர்கள் 30க்கு மேலான பாடல்களை இயற்றினார். இப்பாடல்களின் பரவலுடன் அதிகமான பிரமுகர்கள் பொது மக்கள், ஏன் அரசியல் வாதிகள் ஆகியோரின் மனதில் ரிஷ்கேஷ் ஒரு அற்பதமான அழகான இடமாக மாறியுள்ளது.

அப்போது தனது யோகா பயிற்சி வகுப்பில் சியாவ்லின்ச்சியாங் ஒரேயொரு சீனர் தான். அவர் கங்கை ஆற்றின் கரையிலுள்ள இப்பள்ளியின் விடுதியில் 2 திங்களாக வசித்தார். அப்போது யோகா கற்றுக்கொள்ள கட்டணம் செலுத்த தேவையில்லை. சுயவிருப்பத்தின் படி பணம் கொடுக்கலாம். அதேவேளையில், உண்மையான யோகா ஆசிரியர்கள் உங்களுக்கு கடினமான யோகா நிலைமையை கற்பிக்காது. அவர்களின் கருத்தில், யோகா மனிதரின் உள்ளத்தைத் திறக்கும் வழிமுறை அல்லது பாலமாக திகழ்கின்றது.

தற்போது, ரிஷ்கேஷ் நகரில் அதிக சீன மக்கள் உள்ளனர். அவர்கள் புகழ்பெற்ற நிறுவன யோகா ஆடைகளை அணிந்து, விலை உயர்வான யோகா தரைவிரிப்புகளைக் கொண்டு செல்கின்றனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040