ஒவ்வோர் ஆண்டின் ஏப்ரல் திங்கள் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை, ரிஷ்கேஷ் நகரில் யோகா பயிற்சிக்கு சாதகமான பருவமாகும். ஏப்ரல் திங்கள், ரிஷ்கேஷ் நகரில் மாபெரும் சர்வதேச ரிஷ்கேஷ் விழா நடைபெறுகின்றது.
சியோலின்ச்சியாங் தற்போது சீனாவிலுள்ள ஒரு யோகா பள்ளியின் இயக்குநராக மாறியுள்ளார். இந்தப் பள்ளியின் மாணவர்களில் அதிகமானோர் தொழில் முனைவோர் என்று அவர் தெரிவித்தார்.
தற்கால வாழ்க்கையில், கவலையை அனைவரும் உணர்கின்றனர். ஆனால், தொழில் முனைவோர்கள் எளிதாக கவலை அடையும் மக்களாவர். தியானம் செய்யும் போது முன்பு உணராத அமைதியை ரசிக்கலாம். உடல் மட்டுமல்ல உள்ளமும் ஓய்வு பெறுகின்றன என்று யோகா பயிற்சியில் கலந்து கொண்ட தொழில் முனைவோர் ஒருவர் கூறினார்.
சீனத் தொழில் முனைவோர் எனும் இதழ் அண்மையில் 252 தொழில் முனைவோரிடையில் ஓராய்வை மேற்கொண்டது. அவர்களில் 90.6 விழுக்காட்டினர் நாள்தோறும் சராசரியாக 11 மணி நேரம் பணி புரிகின்றனர். தூங்கு நேரம் 6.5 மணி நேரம் மட்டுமே. வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் ஓய்வு பெறுகின்றார்.
ஆகவே, பெய்ஜிங் போன்ற பெரிய நகரங்களில் பல கூட்டு நிறுவனங்களில் பணியாளர்களுக்கு யோகா வகுப்பை ஏற்பாடு செய்கின்றனர். இத்தகைய ஏற்பாடு அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
சியாவ்லிச்சியாங் யோகா தளத்தை கட்டியமைக்கத் திட்டமிட்டுள்ளார். தொழில் முனைவோர் உட்பட உயர் நிலை பிரமுகர்களை அவர் இலக்காகக் கொள்கின்றார்.
1985ஆம் ஆண்டு சீன மத்திய தொலைகாட்சி நிலையம் ஹுய்லான் யோகா எனும் திரைப்படத்தை வழங்கிய பிறகு, அதிக சீன மக்கள் இந்த அழகான உடல் பயிற்சி முறைமை பற்றி அறிந்து கொண்டனர். ஆரம்பத்தில் இப்பயிற்சியில் ஈடுபடுவோர் அதிகமானோர் பெண்கள். படிப்படியாக மென்மேலும் அதிகமான மக்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
சியிங்சே என்பது ஒரு சீன பயணியர் சேவை நிறுவனத்தின் பெயராகும். திங்களுக்கு ரிஷ்கேஷ் நகருக்கு 3 பயணக் குழுகளை ஏற்பாடு செய்கிறது. 10 நாட்கள் நீடிக்கும் யோகா பயிற்சி பயணத்துக்கு சுமார் 10 ஆயிரம் யுவான் கட்டணம் ஆகும். சீனாவில் சில யோகா பயிற்சி வகுப்புகள், இந்தியாவில் உள்ளூர் சுற்றுலா நிறுவனங்கள் ஆகியவற்றுடன் எங்கள் நிறுவனம் நல்ல ஒத்துழைப்பு மேற்கொள்கின்றது என்று சியிங்சே எனும் பயணியர் சேவை நிறுவனத்தைச் சேர்ந்த வழிக்காட்டி ஒருவர் கூறினார்.
யோகா பற்றிய பயணம் சீன மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள அதேவேளையில், இந்தியாவின் யோகா பள்ளிகளும் சீனாவில் வகுப்புகளைத் திறக்கின்றன. ஐயங்கர், குன்டாலினி, ஸ்வன்நன்தா ஆகிய 3 பள்ளிகள் சீனாவில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளன. பொதுவாக வகுப்பின் நேரம் இருபது நாட்களுக்குள். கல்வி கட்டணம் 30 ஆயிரம் யுவான் முதல் 50 ஆயிரம் யுவான் வரை.