• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மைக்ரோ சாப்ட் கூட்டு நிறுவனம் தொடர்பான சீனாவின் ஏகபோக வணிக எதிர்ப்புப் புலனாய்வு
  2014-11-26 09:11:57  cri எழுத்தின் அளவு:  A A A   

அண்மையில், சீனத் தேசியத் தொழில் மற்றும் வணிகப் பணியகம், ஷாங்காய், குவாங்சோ, செங்து முதலிய நகரங்களில் அமைந்துள்ள மைக்ரோ சாப்ட் நிறுவனக் கிளைகளில் ஒரே நேரத்தில் ஏகபோக வணிக எதிர்ப்புத் தொடர்பான திடீர் புலனாய்வு மேற்கொண்டது. இது சமூகத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. மைக்ரோ சாப்ட் நிறுவனம் 1992ஆம் ஆண்டு சீனச் சந்தைக்குள் நுழைந்துள்ளது. சீனாவில் வியாபாரம் செய்த முதலாவது தொகுதி வெளிநாட்டுப் பெரிய கூட்டு நிறுவனங்களில் இது ஒன்றாகும்.

சீனத் தேசியத் தொழில் மற்றும் வணிகப் பணியகம் இப்புலனாய்வு மேற்கொள்ளும் நோக்கம் என?இச்சம்பவம் சீனாவின் சந்தை சூழ்நிலையில் எந்தெந்த தாக்கம் ஏற்படும்? இன்றைய நிகழ்ச்சியில் உங்கள் கேள்விக்கப் பதிலளிக்கின்றேன்.

• கடந்த ஆண்டு ஜுன் திங்கள் சில சீனத் தொழில் நிறுவனங்கள் மைக்ரோ சாப்ட் நிறுவனம் ஏகபோக வணிகம் செய்வதாக சீனத் தேசியத் தொழில் மற்றும் வணிகப் பணியகத்திடம் புகார் செய்தன. வின்தோஸ் இயக்கு அமைப்புமுறை மற்றும் ஆஃபிஸ் அலுவலக மென்பொருளின் தொடர்பான தகவல்களை மைக்ரோ சாப்ட் நிறுவனம் வெளியிட்ட தவறால், இந்த தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கணினிகளின் மென்பொருள் இசைமை உட்பட பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது என்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. சீனாவின் ஏகபோக வணிக எதிர்ப்புச் சட்டத்துக்கு மீறிய இந்நிலைமை பற்றி சீனத் தேசிய தொழில் மற்றும் வணிகப் பணியம் புலனாய்வு மேற்கொள்ளத் துவங்கியது.

• சீன அரசியல் மற்றும் சட்டவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏகபோக வணிக எதிர்ப்புத் துறையில் நீண்டகாலமாக ஆய்வு மேற்கொள்ளும் பேராசிரியர் ஷ் ச்சியேன் சுங் இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்தார். இதுவரை தொடர்புடைய தரப்புகள் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை. ஆனால், மைக்ரோ சாப்ட் நிறுவனம் சந்தையில் ஆதிக்கம் தவறாக செலுத்தியதுடன் இந்தப் புலனாய்வு தொடர்புடையது என்று அவர் கருத்து தெரிவித்தார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040