• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மைக்ரோ சாப்ட் கூட்டு நிறுவனம் தொடர்பான சீனாவின் ஏகபோக வணிக எதிர்ப்புப் புலனாய்வு
  2014-11-26 09:11:57  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜுன் 30ஆம் நாள், மைக்ரோ சாப்ட் நிறுவனம் ஓரறிக்கையை வெளியிட்டது. சீனாவின் சட்டங்களையும் சட்ட விதிகளையும் மைக்ரோ சாப்ட் எப்போதும் கடைப்பிடிக்கின்றது. கணினத் துறையில் உலகில் முன்னேறிய கண்காணிப்பு மற்றும் செயல்பாட்டு அமைப்புமுறையைக் கொண்ட மைக்ரோ சாப்ட் உலகப் பல்வேறு சந்தைகளில் தகுந்த இயங்குதல் மேற்கொள்கின்றது என்று அவ்வறிக்கை கூறியது.

அதேவேளையில், சீனாவில் புகழ்பெற்ற ஓர் இணையத்தளம் இச்சம்பவம் பற்றி பொது மக்கள் கருத்து கணிப்பு நடத்தியது. வாக்களித்தவர்களில் 81.4 விழுக்காட்டினர் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் மீது ஏகபோக வணிக எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆதரவு அளித்துள்ளனர். மைக்ரோ சாப்ட் சீனாவில் ஏகபோக வணிகம் மேற்கொள்வதாக 80.2 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.

இவ்வாண்டின் துவக்கத்தில் வின்தோஸ் எக்ஸ் பி இயங்குதல் அமைப்புமுறை மீதான தொழில் நுட்ப ஆதரவை நிறுத்துவதாக மைக்ரோ சாப்ட் நிறுவனம் அறிவித்தது. சீனாவில் சுமார் 20 கோடி கணினிகள் அதனால் கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன. தவிர, வின்தோஸ் 8 இயங்குதல் அமைப்புமுறையின் விற்பனை விலையையும் உயர்த்த அது அறிவித்துள்ளது. சந்தையில் ஆதிக்கத்தை தவறாகச் செலுத்தி ஏகபோக வணிகம் செய்வதாக பலர் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தைக் குற்றஞ்சாட்டினர்.

ஒருசில வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் இப்புலனாய்வு பற்றி ஆதரமற்ற சில கட்டுரைகளை வெளியிட்டன. அமெரிக்காவில் குவா வேய் நிறுவனம் தண்டனை விதிக்கப்பட்டதற்கான பதிலொலி இதுவாகும் என்று அவை கூறின.

ஆனால், சீனாவில் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிப் பாதையை மீளாய்வு செய்த போது, முன்பு இத்தகைய தொழில் நிறுவனங்களின் மீது சீன அரசு போதிய அளவில் கண்காணித்து நிர்வாகிக்கவில்லை என்று சொல்ல்லாம்.

ஐரோப்பாவில் மைக்ரோ சாப்ட் நிறுவனம் பல முறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 2004ஆம் ஆண்டு அதற்கு 50 கோடி யுரோ தண்டனை விதிக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த தவறியதால், அது மீண்டும் 89 கோடி யுரோ தண்டனை விதிக்கப்பட்டது. ஏகபோக வணிக எதிர்ப்பு உடன்படிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்புடைய வாரியம் மைக்ரோ சாப்ட் நிறுவனத்துக்கு 56 கோடி யுரோ தண்டனை விதிப்பதென 2013ஆம் ஆண்டு மார்சு திங்கள் அறிவித்தது.

சீனாவிலும், சில பெரிய தொழில் நிறுவனங்கள் தமது நிதி, தொழில் நுட்பம், தொடர்பு, அறிவிசார் சொத்துரிமை முதலிய மேம்பாடுகளுடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இத்தகைய ஆதிக்கத் தகுநிலையைப் பயன்படுத்தி, சந்தைப் போராட்டம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால், நுகர்வோரின் உரிமையையும் நலன்களையும் பாதிக்கும் அதேவேளையில், சந்தை ஒழுங்கும் சீர்குலையும். நியாயமான நேர்மையான சந்தைப் போராட்டத்தில் பல்வேறு தரப்புகள் பங்கெடுப்பதற்கும் பாதிக்கும்.

ஏகபோக வணிக எதிர்ப்புத் துறையில் சீனா படிப்படியாக பன்னாடுகளில் பயன்படுத்தும் பொது நிலைமைக்கேற்ற, சந்தையுடன் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் போது, சட்டத்தின்படி செயல்படுகின்றது. சந்தையின் நியாயமான சூழ்நிலைமையை அரசு பேணிக்காப்பது, சீனாவில் உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கோ வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ நன்மை பயக்கும்.

மைக்ரோ சாப்ட் நிறுவனம் தொடர்பான புலனாய்வு இன்னும் முடிவடையவில்லை. ஆனால், சீனாவில் தொழில் நடக்க சீனாவின் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்று சீனாவில் தொழில் நடக்கும் அனைத்து கூட்டு நிறுவனங்களுக்கும் அது நினைவூட்டுகின்றது.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040