• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மக்கள் தொகை கணக்கெடுப்பு
  2014-11-28 10:22:46  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனா மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். சீனாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்படி நடைபெறுகிறது என்று அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் எஸ்.செல்வம் மின்னஞ்சல் மூலம் கேள்வி கேட்டார்.

வரலாற்றுப் பதிவைப் பார்த்தால், சீனா உலகில் மிக முன்னதாக மக்கள் தொகை கணக்கெடு நடத்தும் நாடாகும். மட்டுமல்ல உலகில் நீண்டகாலமாக தொடர்ச்சியான மக்கள் தொகை பற்றிய பதிவைக் கொண்ட ஒரேயொரு நாடாகவும் சீனா திகழ்கின்றது.

சீனாவில் மக்கள் தொகை பற்றிய மிக முன்னதான பதிவு, கி.மு.2200ஆம் ஆண்டு பேர்ரசர் பதிவேட்டில் இருக்கின்றது. அப்போது சீனாவில் ஒரு கோடியே 35 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் உள்ளனர்.

வரலாற்று பதிவில் சீனாவின் முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு கி.மு.789ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. ட்டோ லீ எனும் நூலில் இது பற்றி விபரமான பதிவு உள்ளது.

நாடளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்ட நேரத்தில், ஒரே வடிவ கள வாய்வு அம்சங்கள் பற்றி மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் தொகை பற்றிய தகவல்களைச் சேகரிப்பது தொகுப்பது மதிப்பீடு ஆராய்வது, வெளியிடுவது முதலிய பணிகள் அதில் இடம்பெறும். உலகில் பல்வேறு நாடுகள் மக்கள் தொகை பற்றிய தகவல்களைச் சேகரிக்க பயன்படுத்தும் ஒரு அடிப்படை வழிமுறையாகும்.

பிறப்பு, உயிரழப்பு, குடியேற்றம் முதலிய காரணங்களால், மக்கள் தொகை எப்போதும் மாறிவிடும். ஆகவே, ஒரு குறிப்பிட்ட நேரத்தை உறுதிப்படுத்தி, நாடளவில் ஒரே நேரத்தில் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். அரசினைப் பொருத்த வரை இது முக்கியதொரு பணியாகும். ஆட்சி, பல்வேறு கோட்பாடுகள் மற்றும் கொள்கைகைளை தீர்மானிப்பதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு மிக முக்கியமானது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது பொதுவாக பால், வயது, இனம், கல்வி தரம், வேலை, தங்குமிடம், சமூகக் காப்புறுதி, திருமணம் நிலை, வீடு முதலிய தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது.

சீனாவில் கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2010ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் நடத்தப்பட்டது.

இவ்வாய்வில் வெளிநாட்டவர்கள் முதன்முதலில் சேர்க்கப்பட்டனர். அதாவது சீனாவில் வாழும் வெளிநாட்டு மாணவர்களும், பணி புரியும் வெளிநாட்டவர்களும் இவ்வாய்வில் சேர்க்கப்பட்டனர்.

அதேவேளையில், வெளிநாடுகளில் பயிலும் சீன மாணவர்களும், பணி புரியும் சீனர்களும், சீனத் தூதரகங்களின் பணியாளர்களும் பதிவு செய்யபடுகின்றனர்.

2010ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சீன மக்கள் தொகை கள ஆய்வில் சுமார் ஒரு இலட்சம் பணியாளர்கள் பங்கெடுத்துள்ளனர். முழு சீனாவிலும் மக்கள் தொகை 137 கோடியே 5 இலட்சத்து 36 ஆயிரத்து 875 ஆகும்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040