• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மக்கள் தொகை கணக்கெடுப்பு
  2014-11-28 10:22:46  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில் மக்கள் தொகை பற்றி முதலாவது கணக்கெடுப்பு 1953ஆம் ஆண்டில் நடைபெற்றது. அவ்வாண்டில் முதலாவது சீனத் தேசிய மக்கள் பேரவை மாநாட்டுக்கு முன், பல்வேறு பிரதேசங்களில் வாழும் மக்கள் தொகை எவ்வளவு, பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. முதலாவது மக்கள் தொகை களவாய்வில் மக்களின் முகவரி, பெயர், பால், வயது, இனம், குடும்பம் உரிமையாளருடன் உறவு ஆகிய 6 மட்டும் பதிவு செய்யப்பட்டன.

1964ஆம் ஆண்டு 2வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது சீன மக்கள் 3 ஆண்டுகால பட்டினியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சீனாவில் பல்வேறு துறைகளில் அதிக சிக்கல்கள் காணப்பட்டன. உள்நாட்டு நிலைமை பற்றி மேலும் விபரமாக அறிந்து கொள்ள 2வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அதன் முடிவு இரகசிய ஆவணங்களாக வெளியிடவில்லை. கொள்கை தீர்மானத்துக்காக உயர் நிலை தலைவருக்கு மட்டும் விநியோகிக்கப்பட்டது. பொது மக்களுக்கு மக்கள் தொகை மட்டும் வெளியிடப்பட்டது.

பிறகு மக்கள் தொகை பற்றிய கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தலாம் என்று 1982ஆம் ஆண்டு அரசு தீர்மானித்துள்ளது.

அவ்வாண்டில் 3வது கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பு உள்ளடக்கத்தை வகுப்பதில் பங்கெடுக்க அமெரிக்க நிபுணர்களை அழைக்கப்பட்டனர். வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையின் ஒரு முக்கிய அறிகுறி இது கருதப்படுகிறது.

அப்போது சீனாவில் குடும்ப நலத் திட்டம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே மேலும் ஒரு தகவல், 1987ஆம் ஆண்டு சீனாவில் 1 விழுக்காட்டு மக்களிடையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதற்குப் பின் நாடளவில் மேற்கொள்ளப்பட்ட 2 மக்கள் தொகை கணக்கெடுப்புகளிடையில் இத்தகைய சிறியதளவு சிற்றிட ஆய்வு ஒரு முறை நடத்தப்படுகிறது.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040